காவ்யா இருக்க வீட்டுல நான் இனிமே இருக்க மாட்டேன்.! வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்த ப்ரியா.!

ஈரமான ரோஜாவே தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பிரியா தனது மாமனார் மற்றும் மாமியாரிடம் சென்று காவியா இருக்கும் வீட்டில் தன்னால் இனிமேலும் வாழ முடியாது என்று சொல்லி தான் தனிக்குடித்தனம் செல்ல இருக்கும் விஷயத்தை கூறுகிறார். அப்போது ஜீவாவின் தாயார் தனிக்குடித்தனம் செல்ல தான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று சொல்லி கதறி அழுகிறார். ஈரமான ரோஜாவே தொடரில் தற்போது அடுத்தடுத்து பிரச்சனைகள் எழுந்து கொண்டே இருக்கிறது. ஜீவாவும் காவியாவும் காதலித்து வந்த விஷயம் இத்தனை நாள் ஜீவாவின் மனைவி பிரியாவிற்கு தெரியாமல் இருந்து வந்தது. தற்போது இந்த விஷயம் தெரிந்த பின்பு பிரியாவால் பழைய மாதிரி சகஜமாக இருக்க முடியவில்லை. தனது தங்கை காதலித்த நபரை தான் திருமணம் செய்து கொண்டது குறித்து பிரியா மிகவும் வேதனைப்படுகிறார். இதனால் அவரால் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. தன் கணவருடனும் சேர்ந்து வாழ முடியவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காவ்யா இருக்க வீட்டுல நான் இனிமே இருக்க மாட்டேன்.! வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்த ப்ரியா.! 1

விளம்பரம்

பிரியாவும் காவியாவும் அக்கா தங்கைகளாக இருக்கின்றனர். பிரியாவிற்கு பார்த்திபனை திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனால் பார்த்திபனின் தம்பி ஜீவாவும் காவியாவும் காதலித்து வருகின்றனர். கடைசி நிமிடத்தில் பிரியா கடத்தப்பட்டு விட்டதால் அவரது தங்கை காவியாவிற்கு பார்த்திபனை திருமணம் செய்து வைக்கின்றனர். பின்னர் பிரியாவை காவ்யா காதலித்து வந்த ஜீவாவுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணத்தின் போது ஏற்பட்ட குழப்பங்கள் இன்று வரை தீராமல் இருந்து வருகிறது. பிரியாவும் ஜீவாவும் இன்று வரை ஒன்றாக இணைந்து வாழவே தொடங்கவில்லை. ஆனால் பார்த்திபனும் காவியாவும் ஒன்றாக இணைந்து வாழ தொடங்கி இருக்கின்றனர். ஜீவாவும் காவியாவும் காதலித்து வந்த விஷயம் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்து விடுகிறது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ள பிரியாவால் முடியவில்லை. தன் தங்கை மற்றும் கணவரும் காதலித்து வந்த விஷயம் தெரிந்து விட்டதால் அவரால் பழைய மாதிரி சகஜமாக இருக்க முடியவில்லை.

தொடர்புடையவை  உனக்கு மரியாதை அவ்ளோதான்.! வீட்டை விட்டு வெளியே போடா.! வெற்றியை துரத்தி விட்ட அபி.!

காவ்யா இருக்க வீட்டுல நான் இனிமே இருக்க மாட்டேன்.! வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்த ப்ரியா.! 3

விளம்பரம்

காதலித்த இருவரும் ஒரே வீட்டில் இருப்பது சரியில்லை என்று சொல்லி ஜீவாவை பிரியா தனிக் குடித்தனம் அழைத்துச் செல்ல திட்டமிடுகிறார். ஆனால் இதற்கு ஜீவாவும், ஜீவாவின் பெற்றோர்கள் என யாருமே சம்மதிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது ஜீவாவின் பெற்றோர்களிடம் செல்லும் பிரியா காவியா இருக்கும் வீட்டில் நான் இனிமேல் ஒரு நிமிடம் கூட இருக்க விரும்பவில்லை, காதலித்த இருவர் ஒரே வீட்டில் இருப்பது சரியாக படவில்லை, எனவே நானும் ஜீவாவும் தனிக்குடித்தனம் செல்ல இருக்கிறோம் என்று கூறுகிறார். இதைக் கேட்ட ஜீவாவின் தாயார் தனிக்குடித்தனம் செல்ல நான் அனுமதிக்க மாட்டேன் என்று கதறி அழுகிறார். ஆனால் பிரியா தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment