விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி தனது தாயார் சௌந்தர்யாவிற்கு தெரியாமல் கண்ணம்மாவை திருமணம் செய்ய இருக்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா சீசன் 2 கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பாரதியாக சன் டிவியில் ரோஜா சீரியலில் நடித்து வந்த சிபு சூரியனும், கண்ணம்மாவாக நடிகை வினுஷா தேவியும் நடித்து வருகின்றனர். பாரதி கண்ணம்மா சீசன் ஒன் கொடுத்த மிகப்பெரிய வெற்றியால் தற்போது இந்த சீசன் 2 எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சீரியல் கதைப்படி சிறைக் கைதியாக இருக்கும் சித்ரா என்பவர் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு கண்ணம்மா என்கிற ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்படுகிறது. பேருந்தில் வைத்து கண்ணம்மாவை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு விடுகின்றனர். ப்ரோமோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அப்போது சித்ரா கண்ணம்மா என்கிற பெயரில் ஆள்மாறட்டம் செய்து கண்ணம்மா வீட்டுக்குள் தான் கண்ணம்மா என்று பொய் சொல்லி வீட்டிற்குள் நுழைகிறார். பின்பு அவருக்கு பாரதியுடன் பழக்கம் ஏற்படுகிறது. தான் உண்மையான கண்ணம்மா கிடையாது, நான் சித்ரா என்கின்ற உண்மையை பாரதியிடம் கண்ணம்மா கூறுகிறார். இருந்தபோதிலும் கண்ணம்மாவின் மீது இருக்கும் நட்பு பாரதிக்கு காதலாக மாறுகிறது. பாரதி கண்ணம்மாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் கொள்கிறார். இதற்கிடையே பாரதிக்கும் அவரது அத்தை மகள் வெண்பாவிற்கும் திருமணம் செய்து வைக்க பாரதியின் தாயார் சௌந்தர்யா திருமண ஏற்பாடுகளை நடத்தி வருகிறார். பாரதிக்கு வெண்பாவை திருமணம் செய்து கொள்வதில் துளியும் விருப்பமில்லை. அவர் கண்ணம்மாவை திருமணம் செய்து கொள்ளத்தான் ஆசைப்படுகிறார். இந்த நிலையில் தற்போது அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் பாரதி வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் சென்று கண்ணம்மாவை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகளை நடத்தி வருகிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பாரதியின் தாயார் சௌந்தர்யா தற்போது கோபத்துடன் கிளம்பி கோவிலுக்கு வருகிறார். இதனால் பாரதி கண்ணம்மா திருமணம் நடைபெறுமா? என்பது தெரியவில்லை. பாரதி கண்ணம்மாவின் கழுத்தில் தாலி கட்டுவானா? இல்லையா? என்பதை வரும் வாரங்களில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television