AR ரஹ்மான் மகன் AR அமீன் குரலில் அருமையான ஒரு மெலடி.! பத்து தல படத்தின் 2nd சிங்கிள் வெளியானது.!

நடிகர் சிம்பு நடிக்கும் பத்து தல படத்திலிருந்து தற்போது இரண்டாவது சிங்கிள் பாடல் “நினைவிருக்கா” வெளியாகியிருக்கிறது. இந்த பாடலை ஏ ஆர் ரகுமானின் மகன் ஏ ஆர் அமீன் பாடியிருக்கிறார். சமீபத்தில் இந்த பாடலின் ப்ரோமோ வெளியாகி கவனத்தை ஈர்த்திருந்த நிலையில் தற்போது முழு வீடியோ வெளியாகி இருக்கிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது வரை சுமார் 47 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. இதற்கு முன்பாக அவர் நடித்த மாநகரம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. சில காலமாக இடைவெளி எடுத்திருந்த சிம்புவிற்கு மாநகரம் படம் திருப்பு முனையாக அமைந்திருந்தது. தொடர்ந்து அவர் கொரோனா குமார், பத்துதல போன்ற படங்களை கைவசம் வைத்திருந்தார். கொரோனா குமார் திரைப்படம் குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்து வருகிறது. அந்த படத்தை சிம்பு கைவிட்டு விட்டார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

AR ரஹ்மான் மகன் AR அமீன் குரலில் அருமையான ஒரு மெலடி.! பத்து தல படத்தின் 2nd சிங்கிள் வெளியானது.! 1

விளம்பரம்

நெடுஞ்சாலை, சில்லுனு ஒரு காதல் படங்களின் மூலமாக கவனம் ஈர்த்த இயக்குனர் ஒப்பிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு தற்போது பத்து தல படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், டிஜே அருணாசலம், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஸ்டுடியோ கிரீன்ஸ் மற்றும் பென் ஸ்டூடியோஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்கள். இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்தப் படம் இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் படத்தில் இருந்து டீசர், ட்ரெய்லர் முதல் சிங்கிள் பாடல் என அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தின் முதல் சிங்கிளான “நம்ம சத்தம்” கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது

தொடர்புடையவை  ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன நடிகை கனகா.! அதிர்ச்சியளிக்கும் சமீபத்திய புகைப்படங்கள்.!

AR ரஹ்மான் மகன் AR அமீன் குரலில் அருமையான ஒரு மெலடி.! பத்து தல படத்தின் 2nd சிங்கிள் வெளியானது.! 3

விளம்பரம்

தற்போது இந்த படத்தில் இரண்டாவது சிங்கிள் பாடலான “நினைவிருக்கா” இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு முன்பாக சில நாட்களுக்கு முன்பு ஏ ஆர் அமீன் இந்த பாடலை பாடுவது போலவும் அதற்கு அவரது தந்தை ஏ ஆர் ரகுமான் இசையமைப்பது போலவும் ஒரு சிறிய ப்ரமோ வெளியாகி இருந்தது. அதில் கவிஞர் கபிலன், ஒப்பிலி கிருஷ்ணா ஏ ஆர் ரகுமான் ஆகியோர் உரையாடிக் கொண்டிருக்கும்போது ஒரு இளம் சிங்கரை வைத்து இந்த பாடலை பாடலாமா என்று கேட்கின்றனர். அப்போது ஏ ஆர் ரகுமான் ஏ ஆர் அமீனை அறிமுகப்படுத்துவது போன்ற ப்ரோமோ வெளியாகி இருந்தது. அமீனுடன் இணைந்து சக்தி ஸ்ரீ கோபாலன் இந்த பாடலை பாடியிருக்கிறார். அடுத்ததாக சிம்பு நடிக்கும் 48வது படத்தை உலக நாயகன் கமலஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பது குறிப்பிடப்பட்டது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் பாடலை காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Sony Music South

விளம்பரம்

Leave a Comment