வெங்கட் பிரபுவின் அடுத்த தரமான படைப்பு.! கஸ்டடி படத்தின் டீசர் வெளியானது.!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் கஸ்டடி திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் வெங்கட் பிரபு. பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனாக இருக்கும் இவர் இயக்குனர், நடிகர், பின்னணி பாடகர் என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். இவர் 2007 ஆம் ஆண்டு வெளியான சென்னை 28 என்கிற படத்தை இயக்கியதன் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்தார். அதன் பின்னர் இவர் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 28 பாகம் 2 போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். இவர் கடைசியாக சிம்புவை வைத்து இயக்கிய “மாநாடு” திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு இவர் மன்மத லீலை, விக்டிம், கஸ்டடி என்கிற மூன்று படங்களை இயக்கி இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபுவின் அடுத்த தரமான படைப்பு.! கஸ்டடி படத்தின் டீசர் வெளியானது.! 1
இதில் கஸ்டடி திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கிறது. மன்மத லீலை படத்திற்கு பின்னர் மீண்டும் நாக சைதன்யா உடன் கைகோர்த்து இருக்கிறார் வெங்கட் பிரபு. இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்க உள்ளனர். ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விரைவில் டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நீருக்கடியில் வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்ட கிலிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு டீசர் அறிவிப்பை வெளியிட்டிருந்தனர் படக் குழுவினர். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  பிரம்மாண்டமாக நடைபெற்ற DON பட இயக்குனர் Cibi chakravarthy திருமண புகைப்படங்கள்..!

வெங்கட் பிரபுவின் அடுத்த தரமான படைப்பு.! கஸ்டடி படத்தின் டீசர் வெளியானது.! 3
“காயம் பட்ட மனசு ஒருத்தன எந்த எக்ஸ்ட்ரீமுக்கு வேணாலும் கொண்டு போகும்” என்ற பின்னணி குரலில் ஆரம்பிக்கும் டீசரில் அரவிந்தசாமியின் என்ட்ரி அதிரடியாக இருக்கிறது. இந்த படம் வருகிற மே மாதம் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. நீங்களும் அந்த டீசர் வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

Youtube Video Embed Code Credits: Junglee Music Tamil

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment