சென்னையில் புது வீடு வாங்க போகும் மைனா நந்தினி.! வீட்டை சுற்றி காண்பித்து வீடியோ வெளியிட்ட மைனா.!

பிரபல சின்னத்திரை நடிகையாக இருக்கும் மைனா நந்தினி தற்போது தனது கணவருடன் புது வீடு வாங்குவதற்காக சென்றிருக்கிறார். அங்கிருந்து அவர் அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறது. மதுரையில் பிறந்து வளர்ந்த மைனா நந்தினி முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் மந்திரம் என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் அவருக்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வெண்ணிலா கபடி குழு, வெப்பம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, காஞ்சனா 3, நம்ம வீட்டுப் பிள்ளை, அரண்மனை 3, விக்ரம், விருமன், சர்தார் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இதற்கு முன்பாக அவர் சின்ன திரையிலும் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார். 2012 ஆம் ஆண்டு வெளியான அழகி என்கிற நாடகத்தின் மூலமாகத்தான் அவர் முதன்முதலாக அறிமுகமானார். ஆனால் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ சரவணன் மீனாட்சி தான். இந்த சீரியலில் மீனாட்சியின் தோழியாக மைனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார் நந்தினி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் புது வீடு வாங்க போகும் மைனா நந்தினி.! வீட்டை சுற்றி காண்பித்து வீடியோ வெளியிட்ட மைனா.! 1
இந்த நாடகத்திற்கு பின்னர் அவருக்கு நந்தினி என்கிற பெயர் முற்றிலும் மறைந்து, மைனா என்கிற பெயர் நீடித்திருக்கிறது. மைனா என்று சொன்னால் தான் தெரியும் அளவிற்கு இவர் அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றிப் போனார். பின்னர் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி பாகம் 3, நீலி, சின்னத்தம்பி, அரண்மனைக்கிளி போன்ற பல நாடகங்களில் நடித்திருக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கூட சிறப்பு தோற்றத்தில் வந்திருக்கிறார். இது மட்டுமில்லாமல் சில வெப் சீரிஸ்கலிலும் நடித்திருக்கிறார் மைனா. மேலும் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்ற பிக் பாஸ் சீசன் 6லும் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார். இதில் கடைசி ஐந்து இடத்தில் அவர் இடத்தை பிடித்திருந்தார். பின்னர் நான்காவது நபராக மைனா வெளியேற்றப்பட்டிருந்தார். பிக்பாஸ்க்கு பிறகு மைனாவின் செல்வாக்கு சற்று உயர்ந்திருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  மகன் கோபியை வெளியே எடுக்க சொன்ன ஈஸ்வரி..! கிழித்து தொங்கவிட்ட பாக்கியா..! பாக்கியலட்சுமி ப்ரோமோ..!

சென்னையில் புது வீடு வாங்க போகும் மைனா நந்தினி.! வீட்டை சுற்றி காண்பித்து வீடியோ வெளியிட்ட மைனா.! 3

மைனாவின் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை, சின்னத்திரை நடிகர் யோகி என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார் மைனா. இவர்களுக்கு துருவ் என்கிற மகனும் இருக்கிறார். இருவரும் இணைந்து youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று அவர்கள் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கின்றனர். தனது வீட்டிலிருந்து ஷூட்டிங் நடக்கும் ஏவிபி ஃபிலிம் சிட்டிக்கு செல்வதற்கு இரண்டு மணி நேரம் ஆவதாகவும் அதனால் ஈவிபிக்கு அருகிலேயே ஒரு வீடு வாங்கலாம் என்று அவர்கள் வீடு ஒன்றை பார்ப்பதற்காக சென்றிருக்கின்றனர். அந்த வீட்டை அவர்கள் சுற்றிக் காண்பித்து வீடியோவாக வெளியிட்டு இருக்கின்றனர். ஏசி, கட்டில், மெத்தை, மாடுலர் கிச்சன் அனைத்தும் அமைந்த முழு பர்னிச்சிங் செய்யப்பட்ட வீடாக அந்த வீடு அமைந்து இருக்கிறது. தற்போது மைனா வெளியிட்டு இருக்கும் அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Myna Wings

விளம்பரம்

Leave a Comment