நடு ரோட்டுல நின்னு பசங்க கூட உனக்கு என்ன பேச்சு? இனியாவை வெளுத்து வாங்கிய ராதிகா.!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ராதிகாவிற்கும் இனியாவிற்கும் சண்டை வெடிக்கிறது. டியூசனுக்கு சென்று திரும்பும் வழியில் ராதிகா இனியாவை அவரது நண்பர் சரணுடன் பார்த்து விடுகிறார். இதனால் பிரச்சனை பூதாகரமாக வெடிக்கிறது. பாக்கியலட்சுமி சீரியலின் கதாநாயகன் கோபிக்கு இரண்டு மனைவிகள். இதில் இரண்டாவது மனைவி ராதிகாவுடன் கோபி வசித்து வருகிறார். தாயுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் வீட்டில் இருந்து வெளியேறிய பாக்யாவின் கடைசி மகளும் தனது தந்தை கோபியுடனும், அவரது இரண்டாவது மனைவியுடனும் வசித்து வருகிறார். பேத்தி அந்த வீட்டில் இருப்பதால் தாத்தாவும் பேத்திக்கு பாதுகாப்பாக கோபிய உடனே வந்து குடியிருந்து வருகிறார். இதில் இனியாவிற்கும் கோபியின் இரண்டாவது மனைவி ராதிகாவிற்கும் எப்பொழுதும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. இருவரும் சரிவர பேசிக்கொள்வதில்லை. இனியாவை ராதிகா கண்டிப்பது இனியாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடு ரோட்டுல நின்னு பசங்க கூட உனக்கு என்ன பேச்சு? இனியாவை வெளுத்து வாங்கிய ராதிகா.! 1
இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இனியா டியூஷன் முடிந்து அவரது நண்பர் சரணுடன் ஒரு ஹோட்டலில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார். அப்போது அந்த வழியாக வரும் ராதிகா காரை நிறுத்தி இனியாவிடம் இது யார்? என்று கேட்க, இது என்னுடைய நண்பர் என்று பதில் அளிக்கிறார் இனியா. டியூஷன் முடிந்தால் வீட்டிற்கு வர வேண்டியதுதானே இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்ட ஸ்நாக்ஸ் சாப்பிட வந்ததாக பதிலளிக்கிறார் இனியா. அதற்கு உடனே கோபப்படும் ராதிகா நீ இன்னும் ஐந்து நிமிடத்தில் வீட்டிற்கு வரவேண்டும் என்று கூறுகிறார். நான் என்னுடைய சைக்கிளில் தான் வந்தேன். நான் உங்களுடன் வர வேண்டிய அவசியம் இல்லை, நான் வீட்டிற்கு தனியாக வந்து கொள்கிறேன் என்று கோபமாக பதில் அளிக்கிறார் இனியா. இதனால் கடுப்பான ராதிகா அந்த இடத்தில் இருந்து கிளம்பி வீட்டிற்கு செல்கிறார். அங்கு கோபிக்கு கால் செய்து பேசுகிறார் உடனடியாக வீட்டிற்கு வரும்படி கோபிக்கு கட்டளை இடுகிறார் ராதிகா.

விளம்பரம்
தொடர்புடையவை  அபி எடுத்த தவறான முடிவு..துடித்து போன ஹவுஸ் மேட்ஸ்..என்ன ஆச்சு அபிராமிக்கு?| BiggBoss Ultimate Feb23 Promo 3

நடு ரோட்டுல நின்னு பசங்க கூட உனக்கு என்ன பேச்சு? இனியாவை வெளுத்து வாங்கிய ராதிகா.! 3

வீட்டிற்கு வரும் கோபியிடம் இனியா நடந்ததை கூறுகிறார். சரணை அனைவருக்கும் தெரியும். ஏன் தாத்தாவிற்கு கூட அவனைத் தெரியும், நம் வீட்டிற்கு கூட அழைத்து விருந்து எல்லாம் வைத்திருக்கின்றேன். அம்மா, அண்ணன், அண்ணி என அனைவருக்கும் சரணை தெரியும். ஆனால் இவர்கள் ஏதோ நான் தவறு செய்தது போல என்னை கடையில் வைத்து அப்படி திட்டுகிறார்கள் என்று ராதிகா குறித்து கூறுகிறார் இனியா. மேலும் ராதிகாவோ நான் இனியாவை கண்டிக்க வேண்டுமா கூடாதா இப்போதே ஒரு முடிவு சொல்லுங்கள் என்று கேட்கிறார். ஆனால் என்ன முடிவு சொல்வது என்று தெரியாமல் கோபியை முழித்துக் கொண்டிருக்கிறார். இதனால் கடுப்பான இனியா வீட்டில் இருந்து வெளியேறுவது போல் கோபமாக செல்கிறார். அவர் பின்னாலையே தாத்தாவும் சொல்கிறார். இனியாவிற்கும் ராதிகாவிற்கும் வெடிக்கும் சண்டையால் கோபிக்கே நிம்மதியின்மை ஏற்படுகிறது. இந்த பிரச்சனை இன்னும் பூதாகரமாக வெடிக்கும் என்று தெரிகிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்
தொடர்புடையவை  வயிற்றில் குழந்தையுடன் வழுக்கி விழுந்த வசு.! இன்றைய முழு எபிசோட் விவரம்..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment