எல்லாரும் உங்க அப்பா எங்கன்னு கேட்டாங்க..! அப்பா பற்றி பேசும் போது கண்கலங்கி அழுத சம்யுக்தா.!

சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்து வந்த விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது அவர்கள் தங்களது திருமண வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்கிற சீரியலில் ஹீரோவின் தம்பியாக அபினவ் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விஷ்ணுகாந்த். இவர் ஏற்கனவே பல சீரியல் தொடர்களில் நடித்திருக்கிறார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ஒரு நாடகத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. சிப்பிக்குள் முத்து என்கிற சீரியல் மூலமாக விஜய் தொலைக்காட்சிக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த தொடரில் உடன் நடித்துக் கொண்டிருந்த சம்யுக்தாவுடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. அந்த காதலை அவர்கள் இருவரும் சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். காதலர் தினத்தன்று இருவரும் காதலிப்பதை உறுதி செய்து புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எல்லாரும் உங்க அப்பா எங்கன்னு கேட்டாங்க..! அப்பா பற்றி பேசும் போது கண்கலங்கி அழுத சம்யுக்தா.! 1
இந்த நிலையில் சமீபத்தில் அவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்திருந்தது. திருமண புகைப்படங்களை தங்களது சமூக வலைதள பக்கத்தில் இருவரும் இருந்திருந்தனர். சம்யுக்தா ஏற்கனவே யூடியூப் சீரிஸ்க்களில் நடித்து வந்தார். குறிப்பாக அவர் தனியார் youtube சேனலில் பல தொடர்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். மேலும் நிறை மாத நிலவே என்கிற வெப் சீரிஸிலும் அவர் நடித்திருந்தார். இந்தத் தொடரில் அவருடன் இணைந்து நடித்த ரவி என்பவருடன் அவருக்கு கெமிஸ்ட்ரி ஒத்துப்போனதால் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி இருந்தது. தொடர்ந்து அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு விஜய் டிவிக்குள் என்ட்ரி கொடுத்தார். இந்த சீரியலில் தனது கணவரின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த விஷ்ணுகாந்த் உடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த மார்ச் மூன்றாம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  Biggbossல் இருந்து வெளியேறிய விசித்ராவை பார்ட்டி வைத்து வரவேற்ற குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்.!

எல்லாரும் உங்க அப்பா எங்கன்னு கேட்டாங்க..! அப்பா பற்றி பேசும் போது கண்கலங்கி அழுத சம்யுக்தா.! 3
தற்போது திருமண வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அவர்கள், மேலும் தாலி கட்டிய தருணங்கள், வரவேற்பு தருணங்களை அழகிய தொகுப்பாக வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். தங்களது திருமணத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை அழகாக பகிர்ந்து உள்ளனர். மேலும் சம்யுக்தா பேசும் போது அனைவரும் தனது தந்தை குறித்து கேள்வி எழுப்பினீர்கள், அவருடன் ஏற்பட்ட சிறு மனக்கசப்பு காரணமாக நான் அவருடன் பேசுவதில்லை. திருமணத்திற்க்காக அவர் வந்தார். அப்போது விஷ்ணுவிடம் ரொம்ப நல்ல பொண்ணு கொஞ்சம் கோவம் மட்டும் வரும் நல்லா பாத்துக்கோங்க என்று சொல்லிவிட்டு சென்றார். அப்போது எனக்கு கண்கள் கலங்கிவிட்டது. அதை பேசும் போது இப்போதும் என் கண்களில் கண்ணீர் வருகிறது என்று சொல்லி உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கி அழுதார்.  நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vishusam

விளம்பரம்

Leave a Comment