அட்வான்டேஜை வைத்து சிவாங்கிக்கு மைம் கோபி செய்த வேலை..! கண்கலங்கிய சிவாங்கி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. மூன்று சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசனை ஒளிபரப்பி வருகிறது. விஜய் டிவியில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ஒரு நகைச்சுவை சமையல் போட்டி நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியின் நகைச்சுவை நடிகர்கள் குக்குகளுடன் இணைந்து சமைப்பார்கள். அது குக்குகளுக்கு உதவியாக இல்லாமல் கோமாளித்தனங்கள் செய்து பார்வையாளர்களை சிரிக்க வைப்பதற்காக. சமையலுக்கு நடுவில் கோமாளிகள் செய்யும் சுட்டித்தனங்களும் நடுவர்கள் கொடுக்கும் தொல்லைகளும் இணைந்து எப்படி குக்குகள் சிறப்பாக சமைக்கிறார்கள் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்திற்கு காரணம். முதல் சீசனில் வனிதா விஜயகுமார் வெற்றியாளராகவும், இரண்டாவது சீசனில் கனி வெற்றியாளராகவும், மூன்றாவது சீசனில் ஸ்ருதிஹா வெற்றியாளராகவும் அறிவிக்கப்பட்டனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

அட்வான்டேஜை வைத்து சிவாங்கிக்கு மைம் கோபி செய்த வேலை..! கண்கலங்கிய சிவாங்கி..! 1

விளம்பரம்

தற்போது நான்காவது சீசன் தொடங்கி இருக்கிறது. இந்த சீசனில் வழக்கம்போல் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் நடுவர்களாக இருக்கின்றனர். ரக்சன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சுனிதா, மணிமேகலை, புகழ், குரேஷி ஆகிய நான்கு பழைய கோமாளிகள் இருந்த நிலையில், தற்போது மணிமேகலையும் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டார். தற்போது சிங்கப்பூர் தீபன், ஜி பி முத்து, ரவீனா, மோனிஷா, சில்மிஷம் சிவா போன்ற புதிய கோமாளிகள் பலரை அறிமுகப்படுத்தி இருக்கின்றனர். மணிமேகலை விலகி விட்டதால் அவருக்கு பதிலாக பழைய ஜோக் தங்கதுரை கோமாளியாக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10 குக்குளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கிஷோர் வெளியேறிவிட தற்போது ஒன்பது குக்குகள் சமைத்து வருகின்றனர் அதில் நடிகை சிருஷ்டி, சிவாங்கி, ஷெரின், ராஜ் ஐயப்பன், எழில், விசித்ரா, விஜே விஷால், மதுரை காளையன், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரியன், மைம் கோபி போன்றவர்கள் குக்குகளாக கலக்கிக் கொண்டிருக்கின்றனர். இதில் கிஷோர் மற்றும் காளையன் மற்றும் ராஜ் ஐயப்பா ஆகிய மூவரும் எலிமினேட் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.

தொடர்புடையவை  1000 எபிசோடுகளை நிறைவு செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ்.. கேக் வெட்டி கொண்டாடிய டீம்..

அட்வான்டேஜை வைத்து சிவாங்கிக்கு மைம் கோபி செய்த வேலை..! கண்கலங்கிய சிவாங்கி..! 3

விளம்பரம்

இந்த வாரத்திற்க்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் அச்சு முறுக்கு மற்றும் வளையல் முறுக்கு சுடும் சேலன்ஜ் வைக்கப்பட்டுள்ளது.  மேலும் அட்வான்டேஜ் டாஸ்கில் பூசணிக்காயை தோல் சீவும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மைம் கோபி மற்றும் குரேஷி ஆகியோர் அட்வான்டேஜை வென்றுள்ளனர். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் அட்வான்டேஜை பயன்படுத்திக் கொள்ள வெங்கடேஷ் பட் அறிவுறுத்துகிறார். 2 டிஷ் செய்ய சொல்லி இருக்கிறோம் அதில் ஒரு டிஷ் மட்டும் செய்தால் போதும், இல்லையென்றால் வேறு குக்குக்கு கடினமான ஒரு பொருளை எடுத்துக்கொண்டு வந்து அதில் இனிப்பு செய்ய சொல்லலாம் என்று பட் கூறுகிறார். அப்போது சிவாங்கியை தேர்வு செய்த மைம் கோபி பாகற்காயை எடுத்துக்கொண்டு வந்து சிவாங்கியிடம் கொடுத்து அதில் இனிப்பு செய்ய சொல்கிறார்கள். அதை பார்த்த சிவாங்கி மனம் உடைந்து பேசிக்கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video.! 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment