இயக்குனர் ஒப்பிலி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் பத்து தல. தற்போது இந்த படம் குறித்த ப்ளூ சட்டை மாறன் காட்டமான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். இந்த படம் பற்றி அவர் கூறியதாவது, “இந்த படத்தின் ஆரம்பத்தில் முதலமைச்சர் காணாமல் போய்விடுகிறார். இதனால் சிபிஐ இந்த வழக்கை கையில் எடுக்கிறது. சிபிஐக்கு சுரங்கம் ஒன்றை நடத்திவரும் ஏஜிஆர் மீது சந்தேகம் வருகிறது. ஆனால் ஏஜிஆரை நெருங்குவது அவ்வளவு சுலபமில்லை. எனவே கௌதம் கார்த்திக்கை சீக்ரெட் ஏஜென்ட் போல போலீசாக அனுப்புகிறது. நெருங்கிப் போய் பார்க்கும் போது தான் தெரிகிறது ஏஜிஆர் எவ்வளவு நல்லவர் என்று. இந்த படத்தின் முதல் பாதியில் நல்ல படமாக இருக்கும் என்ற எண்ணம் வந்தது. சிஎம் தொலைந்து போவது, அதை சிபிஐ கண்டுபிடிப்பது என்று விறுவிறுப்பாக ஆரம்பித்தது. ஆனால் வழக்கம் போல வில்லன் தான் ஒவ்வொரு படத்திற்கும் ஸ்ட்ராங்கான கதாபாத்திரமாகும். ஆரம்பத்தில் சிம்புவை வில்லனாக காட்டுகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் அதே சிம்புவை ரொம்ப நல்லவன் போல் காட்டுகிறார்கள். அவர் 2 லட்சம் குழந்தைகளுக்கு படிக்க வைக்கிறார் என்று சொல்லி குபீர் என்று சிரிப்பை வர வைக்கின்றனர். வில்லத்தனங்களை சிம்புவே செய்வதால் கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக இருப்பதே நமக்கு மறந்து போய் விடுகிறது. கௌதம் மேனன் துணை முதலமைச்சர் ஆக இருந்த போதிலும் அடியாட்களை கூட்டி வந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். இது சிம்புவின் கனவு படமாக கூட இருக்கலாம், அவர் கைகாட்டுவது தான் முதலமைச்சர், தான் ஒரு கிங் மேக்கர் போல இருக்க வேண்டும் என்று நிஜத்தில் நினைத்ததை படத்தில் நடத்திக் காட்டி இருக்கிறார். வழக்கம்போல எல்லா நடிகர்களுக்கும் அரசியல் ஆசை வரும் அதுபோல சிம்புவுக்கும் அரசியல் ஆசை வந்திருக்கிறது. படங்களில் இதுபோல செய்து கொண்டிருக்கிறார். கே ஜி எஃப் படத்திற்கு பின்னால் எல்லாரும் சுரங்கத்தை காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். லாங் ஷாட்டில் இருந்து சுரங்கத்தை காட்டுகிறார்கள் அங்கு ஒரு எலிபேட் இருக்கிறது.

அங்கே ஹெலிகாப்டர் வந்து நிற்கிறது. அதிலிருந்து சிம்பு இறங்குறார். அவர் கைக்கு ஒரு ஷாட்டு, காலுக்கு ஒரு ஷாட், மூக்குக்கு ஒரு ஷாட் என்று அத்தனை ஷார்ட் வைத்திருக்கிறார்கள். மேலும் கிளைமாக்ஸில் குதிரைப் படையை கூட்டிட்டு வந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் சிம்பு. கன்னட படமான மஃப்டி படத்தில் ஹீரோவுக்கு எந்த பில்டப்மும், ஹீரோயிஸம் இல்லாமல் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இதில் பில்டப் மட்டுமே இருக்கிறது. கன்னடத்தில் ஹீரோவாக நடித்தவருக்கு என்று ஒரு தனி செல்வாக்கு இருக்கிறது. அதனால் அவர் கைகாட்டுபவர் முதலமைச்சர் என்கிற ஒரு கதை எடுப்பட்டது. ஆனால் இங்கு நம்ம ஆளு ஒரு டம்மி பீஸ். இவரை வைத்துக்கொண்டு இதுபோல படம் எடுத்திருக்கிறார்கள். இது பத்து தலை இல்ல இது வெத்து தலை என்று காட்டமான விமர்சனங்களையும் முன் வைத்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.! அவரின் அந்த முழு வீடியோவை நீங்களும் காண..!கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Tamil Talkies