நடிகர் ஆர்யா நடித்துள்ள காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே இந்த படம் பல ஆயிரம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஆர்யா. இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி உள்ளிட்ட 25 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர் நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு வந்து படங்களில் நடித்த தொடங்கினார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு படம் என்று சொன்னால் அது நான் கடவுள் தான். இந்த படத்தில் அகோரியாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் ஆர்யா. அதற்கு இவருக்கு படங்கள் குவிய தொடங்கியது. டீஸர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பின்னர் மதராசபட்டினம் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பின்னர் காமெடியிலும் தன்னால் கலக்க முடியும் என்று நிரூபிக்க படம் தான் பாஸ் என்கிற பாஸ்கரன். அதன் பின்னர் விஷாலுடன் இணைந்து அவன் இவன் என்கிற படத்திலும் அவர் நடித்தார். குறுகிய காலத்திலேயே பல படங்களில் நடித்து வந்த அவர் நயன்தாராவுடன் இணைந்து ராஜா ராணியில் நடித்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகி சட்டை போடு போட்ட படம் என்று சொன்னால் அது சார்பட்டா பரம்பரை தான். இந்த படத்திற்கு பின்னர் அவருக்கு செல்வாக்கு கூடியது. தற்போது அவர் காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். அந்த போஸ்டர் நேற்று வெளியாகி இருந்தது. தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வரும் ஆர்யா 2019 ஆம் ஆண்டு சாயிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தொடர்ந்து ஆயிஷா மற்றும் ஆர்யா இருவரும் படங்களில் நடித்து வருகின்றனர். ஆயிஷா பத்து தல படத்தில் கூட ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். இந்த நிலையில் ஆர்யா நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்து வரும் படம் தான் காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம். இந்தப் படத்தை தேவராட்டம், விருமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையா இயக்கியிருக்கிறார். ஜி ஸ்டூடியோஸ் மற்றும் ட்ரம் ஸ்டிக்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை சித்தி இத்தானி நடித்திருக்கிறார். இவருடன் இணைந்து பிரபு, பாக்யராஜ், சிங்கம்புலி, நரேன் போன்ற பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது படத்தில் இருந்து டீசர் வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Junglee Music Tamil