இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் தான் விடுதலை பாகம் ஒன்று. தற்போது இந்த படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்துள்ளார். அவர் கூறியதாவது, அருமபுரி என்கிற கிராமத்தில் கனிம வளங்கள் மிகுந்திருக்கிறது. இதனால் பன்னாட்டு நிறுவனம் ஒன்று இந்த ஊரில் சுரங்கம் அமைக்க திட்டமிடுகிறது. அதற்கு அரசு ஆதரவாக இருக்கிறது. ஆனால் அந்த ஊரில் “மக்கள் படை” என்கிற அமைப்பு அந்தத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறது. இதனால் அரசு கம்பெனி போலீஸ் குழு ஒன்றை அந்த கிராமத்திற்கு அனுப்பி வைக்கிறது. அந்த போலீஸ் குழுவில் டிரைவராக நடிகர் சூரி வேலைக்கு சேர்க்கிறார். வேலைக்கு சேர்ந்த பின் இவர் தீவிரவாதிகள் என்று சொல்லப்படும் மக்கள் படை பக்கம் நியாயம் இருப்பதாகவும், போலீஸ் பக்கம் நியாயம் இல்லை என்பதையும் தெரிந்து கொள்கிறார். நான்கு படங்கள் தனுஷை வைத்து கொடுத்த வெற்றிமாறன் இந்த படத்தை பெரிய ஹீரோ இல்லாமல் எடுத்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எடுத்தால் பெரிய நடிகரை வைத்து தான் படம் எடுப்பேன் என்று வீட்டில் உட்கார்ந்து கொண்டு அழுக்கை உருட்டி கொண்டு இல்லாமல், ஒரு காமெடியன் சூரியை வைத்துக்கொண்டு சர்வதேச அளவிலான படத்தை எடுத்த வெற்றிமாறன் தான் உண்மையான இயக்குனர். இந்த படத்தை பொறுத்தவரை அரசு இயந்திரத்தை தலைமைச் செயலாளர் ஒரு பக்கம் இயக்கிக் கொண்டிருக்க, போலீஸ் அதிகாரிகள் மற்றொரு பக்கம் இயக்கிக் கொண்டிருக்க, கிராமத்து மக்கள் போராட்டக்காரர்கள் என அனைவரின் அணுகுமுறையும் பிரச்சனைகளை நோக்கியே இருந்தது. இதை நாம் ஒரு படமாக பார்க்காமல் கூடவே பயணம் செய்வது போல இருந்தது. சில படங்கள் ஆரம்பித்து ஒரு மணி நேரம் ஆகியும் கூட கதைக்குள் போக மாட்டார்கள். ஆனால் முதலில் ஒரு பத்து நிமிடம் சில காட்சிகள் ஓடும். அப்போதே படம் எதை நோக்கி செல்கிறது என்கிற தெளிவு கிடைக்கும். எந்த இடத்திலும் திசை மாறாமல் ஒரே நேர்கோட்டில் சென்று படம் முடிந்திருக்கிறது. சூரியின் நடிப்பு அற்புதமாக இருக்கிறது. அவரது தோற்றமும் அழகாக பொருந்தி இருக்கிறது.

சேத்தனின் கதாபாத்திரம் நமக்கே கோபம் வரும் போல் இருக்கிறது. ராஜீவ் மேனன் ஏட்டையாக வருபவர்கள் ஆகியவர்களின் நடிப்பு பிரமாதம். டாணாக்காரன் இயக்குனர் தமிழின் நடிப்பும் பிரமாதம். வழக்கம் போல விஜய் சேதுபதியும் நடிப்பில் அசத்தியிருக்கிறார். கேமரா மேன் வேல்ராஜனின் ஒளிப்பதிவு மிக அருமையாக வந்திருக்கிறது. ஆர்ட் ஒர்க், எடிட்டிங், துப்பாக்கியை வைத்து நடக்கும் சண்டை ஆகியவை மிக சூப்பராக வந்திருந்தது. கரணம் தப்பினால் மரணம் என்பது போல் கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தால் இது ஒரு ஆவணப்படம் போல் வந்திருக்கும் ஆனால் இந்த படம் மிக அருமையாக வந்திருக்கிறது. படம் முழுவதும் போனை நோண்ட முடியாமல் திரையிலிருந்து கண்ணை எடுக்க முடியாமல் மிக மிக அற்புதமாக இந்த படம் வந்திருக்கிறது என்று தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Tamil Talkies