ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் திரைப்படத்திலிருந்து தற்போது இரண்டாவது சிங்கிள் பாடல் “உன்னோடு வாழ” லிரிக்ஸ் வீடியோ வெளியாகியிருக்கிறது. இந்த படால் வெளியான சில நிமிடங்களிலேயே 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என்று பன்முகத் திறமையாளராக தமிழ் திரையுலகில் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். ஆரம்பத்தில் நடன இயக்குனராக தனது வாழ்க்கை தொடங்கிய இவர் பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். இவர் முனி என்கிற படத்தின் மூலமாக நடிகராக அவதாரம் எடுத்தார். அதன் பின்னர் இவர் இரும்பு குதிரை முரட்டு சிங்கம், காஞ்சனா, காஞ்சனா 2, மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா, காஞ்சனா 3 ஆகிய படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். தற்போது ருத்ரன், அதிகாரம், சந்திரமுகி 2, ஜிகர்தாண்டா பாகம் 2, காஞ்சனா 4 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் நடித்திருக்கும் ருத்ரன் படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் பாடலான “உன்னோடு வாழ” லிரிக்ஸ் வீடியோ வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை இயக்குவதன் மூலமாக 5 ஸ்டார் தயாரிப்பு நிறுவனர் கதிரேசன் முதல் முறையாக இயக்குனராக அவதாரம் எடுக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்றப் போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. மேலும் கிலிம்ப்ஸ் வீடியோக்களும் அடிக்கடி வெளியாகி இருந்தது. சமீபத்தில் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து சூட்டிங் முடிவடைந்த காணொளியும் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் படத்திலிருந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வரும் நிலையில் படத்தின் “உன்னோடு வாழ” என்கிற பாடலில் லிரிக்ஸ் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது.

இந்தப் பாடலை கபிலன் எழுதி இருக்கிறார். சித் ஸ்ரீராம் இந்த பாடலை பாடியிருக்கிறார். வெளியான சில நிமிடங்களிலேயே 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை இந்த பாடல் பெற்றுள்ளது. வருகிற ஏப்ரல் 17ஆம் தேதி ருத்ரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் பாடலை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Five Star Creations