நடிகர் அருள்நிதி, ஆத்மிகா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திருவின் குரல் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. காது கேளாத வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் வித்தியாசமான கதையில் அருள்நிதி நடித்து அசத்தியுள்ளார். பேய் படங்களுக்கு எப்படி ராகவா லாரன்ஸோ அது போல திரில்லர் கதைகளுக்கு அருள்நிதி என்றாகிவிட்டது. தொடர்ந்து பல நல்ல திரில்லர் கதைகளில் நடித்து அசத்தி வருகிறார் அருள்நிதி. “டிமாண்டி காலனி” படம் மூலம் முதல் த்ரில்லர் படம் நடித்த அருள்நிதி அடுத்தடுத்து ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13 என வரிசையாக திரில்லர் படங்கள் மட்டுமே நடித்து வருகிறார். நடுநடுவில் பிரிந்தாவனம், களத்தில் சந்திப்போம் போன்ற படங்களில் தோன்றி ஹிட் அடித்தாலும் அவருக்கென தனி ஹிட் பட்டியல் உருவாக்கியவை இந்த திரில்லர் படங்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான “D block” மற்றும் தேஜாவு படங்களில் இரண்டுமே திரில்லர் கதைக்களத்தில் தான் வெளியானவை. அதே வரிசையில் அருள்நிதி நடிப்பில் கடைசியாக வெளியான படம் டைரி. இந்த படமும் திரில்லர் கதையம்சத்துடன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது மீண்டும் ஒரு கிரைம் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார் அருள்நிதி. திருவின் குரல் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் காது கேளாத வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் வித்தியாசமான கதையில் அருள்நிதி நடித்து அசத்தியுள்ளார். வருகிற ஏப்ரல் 14ம் தேதி அந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது படத்தில் இருந்து ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கியுள்ளார்.

லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார். அருள் நிதிக்கு ஜோடியாக ஆத்மிகாவும், இவர்களுடன் இணைந்து பாரதிராஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீங்களும் அந்த ட்ரைலர் வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Think Music India