சமுத்திர குமாரி பூங்குழலி கதாபாத்திரம் உருவானது எப்படி தெரியுமா? மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு.!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழியின் கதாபாத்திரம் எவ்வாறு உருவானது, பல கட்டங்களுக்குப் பிறகு எவ்வாறு இறுதி வடிவம் பெறப்பட்டது என்பது குறித்த மேக்கிங் வீடியோவை தற்போது படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையில் முக்கிய கதாபாத்திரமாக விளங்குவது பூங்குழலி கதாபாத்திரம். கலங்கரை விளக்கத்தின் பாதுகாவலராக இருக்கும் தியாக விடங்கரின் மகளாக இருப்பவர் சமுத்திரகுமாரி பூங்குழலி. இவர்தான் வந்திய தேவனை கோடியக்கரையில் இருந்து இலங்கைக்கும் பின்னர் மீண்டும் கடலில் விழுந்த அருள்மொழி வர்மரை மீட்டு தனது கப்பலிலேயே நாகப்பட்டினம் சூடாமணி விகாரத்திற்கும் கொண்டு செல்வார். அந்த அளவிற்கு இந்த கதையின் முக்கிய நாயகியாக விளங்கிக் கொண்டிருப்பவர் பூங்குழலி. இந்திய பெருங்கடலையும் வங்கக்கடலையும் அசாத்தியமாக தனது படகின் மூலம் கடந்து நீந்தி வந்து விடுவார், அந்த அளவிற்கு துணிச்சலான பெண் கதாபாத்திரம் இந்த பூங்குழலி கதாபாத்திரம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சமுத்திர குமாரி பூங்குழலி கதாபாத்திரம் உருவானது எப்படி தெரியுமா? மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு.! 1

விளம்பரம்

மேலும் அருள்மொழி வர்மன் மீது ஒருதலையாக காதல் கொள்ளும் இந்த கதாபாத்திரம், இறுதியில் சேந்தன் அமுதன் என்று சொல்லப்படும் உத்தம சோழனுக்கு மனைவியாக மாறிப் போவதும் இந்த கதையின் ஒரு திருப்பம் ஆகும். பொன்னியின் செல்வன் கதையை படமாக்கும் முயற்சியில் மணிரத்தினம் ஈடுபட்டு தற்போது வெற்றி கண்டு இருக்கிறார் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக்கியிருக்கிறது. இரண்டாவது பாகம் வருகிறது ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்திலிருந்து ஒவ்வொரு அப்டேட்டுகளாக வெளியாகி வருகிறது. சமீபத்தில் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, நடிகை திரிஷா, ஐஸ்வர்யா ராய், நடிகர் கார்த்திக், சரத்குமார், பார்த்திபன் போன்ற பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பலரும் இந்த கதையை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இறுதியில் தோற்றுப் போயினர். ஆனால் இந்த சாதனையை இயக்குனர் மணிரத்னம் தற்போது இயக்கி காட்டி இருக்கிறார்.

தொடர்புடையவை  "ஜி.வி பிரகாஷை பிரிந்து விட்டேன்" அதிகாரப்பூர்வமாக அறிவித்த பாடகி சைந்தவி.! கடிதம் உள்ளே.!

சமுத்திர குமாரி பூங்குழலி கதாபாத்திரம் உருவானது எப்படி தெரியுமா? மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு.! 3

விளம்பரம்

படத்திலிருந்து ஏற்கனவே அகநக என்கிற பாடலும் டிரைலரும் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் படம் வெளியாக இன்னும் 23 நாட்களே இருக்கும் நிலையில் படத்திலிருந்து பாடல்கள் மற்றும் கிலிம்ப்ஸ் வீடியோக்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தற்போது ஒவ்வொரு கதாபாத்திரமும் எவ்வாறு உருவானது என்பது குறித்த வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். ஏற்கனவே குந்தவை, அருள்மொழிவர்மன், வந்திய தேவன், ஆதித்த கரிகாலன் ஆகியோரது கதாபாத்திரங்கள் எத்தனை முறை உருவாக்கப்பட்டு இறுதி வடிவம் பெறப்பட்டது என்பதை விளக்கி வீடியோ வெளியிட்டனர். தற்போது பூங்குழலிக்கும் அது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Tips Tamil

விளம்பரம்

Leave a Comment