டேய் நான் தான் டா விநாயகர்..! நம்பு டா.! யோகி பாபுவின் “யானை முகத்தான்” ட்ரைலர் இதோ.!

நடிகர் யோகி பாபு நடித்துள்ள யானை முகத்தான் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா என்கிற நிகழ்ச்சியில் துணை இயக்குனராக இருந்து பின்னாளில் மிகப்பெரிய காமெடியனாக உருவாகி இருப்பவர் யோகி பாபு் இவர் தற்போது ரமேஷ் திலக் உடன் இணைந்து யானை முகத்தான் என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மலையாளத்தில் முன்னணி இயக்குனராக இருக்கும் ரஜிஷ் மிதிலா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். யோகி பாபு மற்றும் ரமேஷ் திலக் ஆகிய இருவர் மட்டுமே முழுக்க முழுக்க படத்தில் நடித்திருக்கின்றனர். பேண்டஸி கதைகளத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை கிரேட் இந்தியன் சினிமாஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ட்ரெய்லர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டேய் நான் தான் டா விநாயகர்..! நம்பு டா.! யோகி பாபுவின் "யானை முகத்தான்" ட்ரைலர் இதோ.! 1
மேலும் இந்த படத்தில் யோகி பாபு உடன் இணைந்து கருணாகரன், ஊர்வசி, ஹரிஷ் பெராடி, ஜார்ஜ் மரியான் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்திருக்கிறார். கார்த்திக் எஸ். நாயர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகளில் இந்த படத் வெளியாக இருக்கிறது. வருகிற தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல் 14ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  துபாயில் மகள் கணவருடன் விடுமுறையை கழிக்கும் குஷ்பூ.! அழகான குடும்பம், சுத்தி போடுங்கப்பா.!

டேய் நான் தான் டா விநாயகர்..! நம்பு டா.! யோகி பாபுவின் "யானை முகத்தான்" ட்ரைலர் இதோ.! 3
இதில் யோகி பாபு விநாயகர் கடவுளாகவும் அவருக்கு பக்தனாக ரமேஷ் திலக்கும் நடித்திருக்கின்றனர். இந்த ட்ரெய்லருக்கு நடிகர் விஜய் சேதுபதி பின்னணியில் குரல் கொடுத்திருக்கிறார். ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சில நிமிடங்களில் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை பெற்று முன்னிலை பெற்றுள்ளது. நீங்களும் அந்த ட்ரைலர் வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Sony Music South.

விளம்பரம்

Leave a Comment