தான் தற்போது மூளையை கழட்டி விட்டு வைத்து தான் தென்னிந்திய படங்களில் நடித்து வருவதாக பிரபல பாலிவுட் நடிகர் ராகுல் தேவ் கூறியிருக்கும் விஷயம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாக தமிழ் சினிமா மட்டுமின்றி எந்த சினிமாவை எடுத்தாலும் ஹீரோவிற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவிற்கு தான் வில்லன் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருந்து வருகிறது. சமீப காலமாக தமிழ் திரைப்படங்களில் கார்ப்பரேட் வில்லன்கள் கதையை காட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். குறிப்பாக வட நாட்டைச் சேர்ந்த ஒருவரை வில்லன் கேரக்டரில் எடுத்து அவர் அரையும் குறையுமாக தமிழ் பேசுவது போன்று காட்டப்படுவது தான் தற்போதைய தமிழ் சினிமாவின் வழக்கமாக இருந்து வருகிறது. அதுபோல பாலிவுட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒருவர்தான் ராகுல் தேவ் அவர் கூறிய கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

கேப்டன் விஜயகாந்துடன் இணைந்து நரசிம்மா, ராகவா லாரன்ஸ் நடித்த முனி நடிகர் அஜித்தின் வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தவர் நடிகர் ராகுல் தேவ். இவர் கடைசியாக லெஜன்ட் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இவர் கூறிய கருத்து ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. தான் படித்த குடும்ப பின்னணியில் இருந்து வந்தவன். தென்னிந்திய சினிமாவின் படங்களின் நடிக்கும் பொழுது என்னுடைய மூளை மற்றும் புத்திசாலித்தனத்தை வீட்டில் கழட்டி வைத்து தான் வந்து நடிப்பேன் என்று கூறி இருக்கிறார். மேலும் தென்னிந்திய சினிமா இன்னும் பழைய டெம்ப்ளேட்டுகளை தான் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் கூறியிருந்தார். இது மட்டுமில்லாமல் இரண்டு பேர் சண்டையிடும் பொழுது யாராவது சட்டையை கழட்டி உடலை காட்டுவார்களா? இதுதான் தற்போது தென்னிந்திய சினிமாவில் நடக்கிறது.

படம் ஓட வேண்டும் என்பதற்காக இன்று போன்று செய்கிறார்கள். மேலும் ஜிம் பாடியாக இருக்கும் தன்னை உடல் வடிவமே இல்லாத ஹீரோ அடிப்பது போன்ற காட்சிகள் வைக்கப்படுகிறது. இதையெல்லாம் சகித்துக் கொண்டுதான் நான் அந்த காட்சிகளில் நடித்தாக வேண்டும் என்று கூறியிருக்கிறார். அவரின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பலரோ இவர் வேதாளம் படத்தில் நடித்திருந்தபோது அஜித்திடம் அடி வாங்குவதுபோல நடித்திருப்பார். அதை மனதில் வைத்து தான் இவ்வாறு இவர் பேசி இருப்பதாக சிலர் கிளப்பி விட்டு இருக்கின்றனர். எனினும் தென்னிந்திய படங்கள் குறித்து ராகுல் தேவ் இவ்வாறு பேசியிருப்பது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது