செவ்வந்தி சீரியல் நடிகைக்கு பிறந்த மகள்.! புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்த திவ்யா ஸ்ரீதர்.!

செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதருக்கு தற்பொழுது பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அவர் தனது மகளின் முகத்தை முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். பலரும் பிரிந்து வாழ்ந்து வரும் கணவர் அர்னவுக்காகத்தான் இப்படி அவர் தனது மகளின் முகத்தை காண்பித்து இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்கிற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த திவ்யா ஸ்ரீதருக்கும் நடிகர் அர்னவிற்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த புகைப்படங்களை திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். பின்னர் திருமணம் ஆன சில மாதங்களிலேயே கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்திருந்தார். நன்றாக போய்கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில், ஒருநாள் திடீரென அர்னவ் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், அவர் விஜய் தொலைக்காட்சியில் நடிக்கும் செல்லம்மா சீரியலின் நடிகை உடன் நெருக்கம் காட்டிவிட்டு தன்னை அடித்து உதைப்பதாகவும் பகிரங்க குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

செவ்வந்தி சீரியல் நடிகைக்கு பிறந்த மகள்.! புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்த திவ்யா ஸ்ரீதர்.! 1
இதையடுத்து அர்னவை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். மேலும் அவருக்கு சில நாட்கள் ஜெயில் தண்டனையும் கிடைத்தது. பின்னர் ஜாமினில் வெளியே வந்த அர்னவ் திவ்யாவை கண்டுகொள்ளவே இல்லை. இந்த நிலையில் திவ்யாவிற்கு சமீபத்தில் வளைகாப்பு நடந்து இருந்தது. உடன் நடிக்கும் நடிகர்கள் சேர்ந்து வளைகாப்பை நடத்தி இருந்தனர். இந்த நிலையில் திவ்யாவிற்கு தற்போது பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த செய்தியை திவ்யா தனது instagram பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அப்போது அந்தப் படத்திற்கு கீழே கமெண்ட் செய்த பலரும் அர்னவை திட்டி தீர்த்திருந்தனர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பதிவு ஒன்றை போட்டு இருக்கும் அர்னவ், “உங்கள் இதயம் உண்மையை உணர்ந்ததை மறக்கும் பொழுது உங்கள் மூளை அந்த உண்மையை அறியும் நீங்கள் பாதுகாப்பாக உணராத போது யாரையும் நம்ப மாட்டீர்கள், அதற்கு காரணம் நேர்மையின் வலியை சமாளிக்க நீங்கள் தயாராக இல்லை என்பதுதான்” என்று குறிப்பிட்டிருந்தார்.

விளம்பரம்
தொடர்புடையவை  அந்த மூணு பேரை எனக்கு சுத்தமா புடிக்காது.! அதுங்க நரிக்கூட்டம்.! ஓப்பனாக பேசிய ராபர்ட் மாஸ்டர்

செவ்வந்தி சீரியல் நடிகைக்கு பிறந்த மகள்.! புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்த திவ்யா ஸ்ரீதர்.! 3
இந்த பதிவிற்கு கீழே ரம்ஜான் காலத்தில் ஆவது உண்மையை கடைப்பிடியுங்கள். அப்புறம் இதுபோல கருத்து எல்லாம் பதிவிடுங்கள் உங்கள் ஈகோ அனைத்தையும் விட்டுவிட்டு முதலில் நீ பெற்ற மகளை போய் பாருங்கள், அப்பா என்பது வரம், முதலில் உங்கள் பிள்ளையை போய் பாருங்கள், அப்பா இல்லாத குழந்தையாக அந்த குழந்தை ஆகிவிடக்கூடாது எல்லாவற்றையும் மன்னித்து மறந்து மனைவியுடன் சேருங்கள் என்றெல்லாம் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் திவ்யா ஸ்ரீதர் தற்போது தனது மகளின் புகைப்படத்தை முதன்முறையாக காட்டி பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அந்த பதிவை பார்த்த பலரும் திவ்யா ஸ்ரீதர் அர்னவிற்கு தனது மகளை காட்டுவதற்காகத்தான் இதுபோல பதிவிட்டு இருக்கிறீர்களா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனினும் இவர்கள் இருவரும் இணைந்து வாழ வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

விளம்பரம்

Leave a Comment