பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் முதல் முறையாக லைவ்வுக்கு வந்துள்ளார் ராபர்ட் மாஸ்டர்.அவர் அங்கு ஹவுஸ்மேட்ஸ் பற்றி பல கருத்துக்களை முன்வைத்தார். வழக்கமாக கேட்கப்படும் விலங்குகளுடன் ஒப்பிட்டு கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் ராபர்ட் மாஸ்டர். இவர் சிறு குழந்தை முதலே படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். தற்போது இவர் பிக்பாஸில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். கடந்த வாரம் நடந்த நாமினேசன் பிராசஸில் இவரை மக்கள் குறைந்த ஓட்டுகளை அளித்து வெளியே அனுப்பினர். வெளியே வந்த பின் தனது பெற்றோர்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார் ராபர்ட் மாஸ்டர். மேலும் சில படங்களில் நடிக்கவும் கமிட்டாக இருப்பதாக தகவல்கள் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் இன்று முதன்முறையாக லைவுக்கு வந்துள்ள ராபர்ட் மாஸ்டர் வீட்டில் உள்ளவர்கள் பற்றி பல கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார். குறிப்பாக வீட்டில் இருக்கும் அனைவரும் நரி போன்றவர்கள். அந்த நரி கூட்டத்திலிருந்து தான் தப்பித்து வெளியே வந்ததே பெரிய விஷயமாக பார்க்கிறேன் என்று பேசியிருக்கிறார். மேலும் அந்த வீட்டில் எனக்கு குயின்சி, ரட்சிதா மற்றும் ஷிவின் இவர்களை மட்டுமே பிடிக்கும். அசீம், தனலட்சுமி, ஜனனி ஆகியோரை சுத்தமாக எனக்கு பிடிக்காது என்று அவர் பேசியிருக்கிறார். மேலும் அசீம் ஒரு விஷமுள்ள பாம்பு என்றும், விக்ரமனை பார்த்து அவர் முதலை போன்றவர் அவர் வாயில் சிக்கினால் யாராலும் வெளியே வர முடியாது என்று பேசினார்.

மேலும் தனக்கு வாக்களித்து தன்னை இதுநாள் வரை காப்பாற்றி வந்த மக்களுக்கு மிக்க நன்றி என்று பேட்டியின்போது ராபர்ட் மாஸ்டர் பேசினார். அவரின் முழு பேட்டியை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video.!
YouTube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7