துடிதுடித்து இறந்த புதுச்சேரி யானை.! லட்சுமியின் கடைசி நிமிடங்கள்.! கலங்க வைக்கும் CCTV காட்சிகள்.!

புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி துடிதுடித்து இறக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது கிடைத்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலருக்கும் கண்களில் கண்ணீரை வந்து விட்டது. இந்த உலகத்திலேயே இருக்கும் மிகப்பெரிய உயிரினம் யானை தான். சிறியவர்கள் தொடங்கிய பெரியவர்கள் வரை யானையைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. நம்மிடம் யாராவது வந்து உங்களுக்கு பிடித்த விலங்கு எது என்று கேட்டால் சட்டென்று நாம் நினைவுக்கு வருவது யானை தான். மனிதரிடம் நெருங்கி பழகும் விலங்குகள் எத்தனையோ இருந்தாலும், யானையும் நாயும் மட்டுமே மிக நெருக்கமாக இருக்கும் உயிரினங்களாக இருக்கிறது. யானையை நம் ஊரில் கோவில்களில் வைத்து பராமரித்து வருவதால் அடிக்கடி யானையை பார்க்கும் வாய்ப்புகளும் நமக்கு கிடைக்கிறது.

துடிதுடித்து இறந்த புதுச்சேரி யானை.! லட்சுமியின் கடைசி நிமிடங்கள்.! கலங்க வைக்கும் CCTV காட்சிகள்.! 1

விளம்பரம்

காட்டிற்குள் குட்டியானைகள் செய்யும் சேட்டைகளை அவ்வப்போது வீடியோக்கள் எடுத்து இணையத்தில் பரப்பும்போது அது வைரல் ஆகுவது வழக்கமாக இருக்கிறது. குட்டியானைகள் செய்யும் சேட்டைகளை பார்த்தால் நமக்கே ஒரு யானை வாங்க வேண்டும் என்றெல்லாம் கூட ஆசை வரும். அதுபோன்ற ஒரு பிரம்மாண்டமான உயிரினம் இன்று துடிதுடித்து இறக்கும் காட்சி பலரின் நெஞ்சையும் கசக்கி பிழிந்து இருக்கிறது. புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி என்று அதிகாலை 5.30 மணியளவில் நடை பயிற்சிக்காக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்த அந்த யானை கால்களை அசைத்து துடி துடித்தது. சிறிது நேரத்திற்கு எல்லாம் அந்த யானை இறந்து விட்டது.

தொடர்புடையவை  தமிழகத்தில் நாகை, கடலூர் , தேனி, திருவாரூர் ஆகிய இடங்களில் பரவலாக மழை!!

துடிதுடித்து இறந்த புதுச்சேரி யானை.! லட்சுமியின் கடைசி நிமிடங்கள்.! கலங்க வைக்கும் CCTV காட்சிகள்.! 3
அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. எப்பேர்பட்ட கல் மனதையும் கரைக்கக் கூடிய வகையில் அந்த வீடியோ இருக்கிறது. பிரம்மாண்டமான அந்த உருவம் துடிதுடித்து இறக்கும் காட்சியைப் பார்த்தால் யார் கண்களில் தான் கண்ணீர் வராது? இறந்த யானை லட்சுமிக்கு அந்த பகுதி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பலரும் யானை கட்டிப்பிடித்து அழும் காட்சிகள் மனதை எருக வைக்கிறது. புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜனும் அந்த யானைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். அந்த சிசிடிவி கட்சியை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

விளம்பரம்

Leave a Comment