தசரா படத்துக்காக அழுது கொண்டே டப்பிங் பேசும் கீர்த்தி சுரேஷ்.! அவரே வெளியிட்ட புது வீடியோ.!

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தசரா படத்திற்காக டப்பிங் பேசிய காணொளியை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தமிழில் இது என்ன மாயம் என்கிற படத்தின் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆனால் இந்த படம் வெளியாவதற்கு முன்பே சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினி முருகன் படம் வெளியானது. இந்த படத்திற்கு பின்னர் கீர்த்திக்கு ரசிகர் பட்டாளம் பெருகியது. முதல் படத்திலேயே பல கோடி இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்திருந்தார் கீர்த்தி. மேலும் செல்லக்குட்டி உன்ன காண என்கிற பாடலுக்கு பின்னர் நேஷனல் கிரஷ் ஆக மாறிப் போயிருந்தார். திரைத்துறைக்கு வந்து குறுகிய காலத்திலேயே விஜய் உடன் பைரவா, சர்க்கார், சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், தனுசுடன் தொடரி, சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ போன்ற பல படங்களில் நடித்திருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தசரா படத்துக்காக அழுது கொண்டே டப்பிங் பேசும் கீர்த்தி சுரேஷ்.! அவரே வெளியிட்ட புது வீடியோ.! 1
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தங்கை கதாபாத்திரத்தில் அண்ணாத்த படத்திலும் நடித்து அசத்தியிருந்தார் .இவருக்கு திறப்பு முறையாக அமைந்த ஒரு படம் என்று சொன்னால் அது நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததுதான். மகாநடி என்று பெயரிடப்பட்டிருந்த இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. சாவித்திரியின் ரசிகர்கள் கண்ணீர் மல்க இந்த படத்தை பார்த்து ரசித்திருந்தனர். அப்படியே சாவித்திரியாக பிரதிபலித்து தான் ஒரு நல்ல நடிகை என்பதை நிரூபித்து இருந்தார் கீர்த்தி சுரேஷ் இந்த படத்திற்கு பின்னால் கீர்த்தியின் செல்வாக்கு அபரிமிதமாக உயர்ந்தது. தற்போது இவர் தமிழில் உதயநிதிக்கு ஜோடியாக மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் போலா ஷங்கர் என்கிற படத்திலும், தமிழில் சைரன், ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  "அடுத்தவ புருஷனுக்கு ஆசை பட்டா இதுதான் கதி" மஹாலக்ஷ்மியை கிழித்து தொங்கவிட்ட பயில்வான்.!

தசரா படத்துக்காக அழுது கொண்டே டப்பிங் பேசும் கீர்த்தி சுரேஷ்.! அவரே வெளியிட்ட புது வீடியோ.! 3

தமிழ் மொழியில் எந்த அளவிற்கு அவருக்கு ரசிகர் இருக்கிறார்களோ அதே அளவிற்கு தெலுங்கிலும் அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகமாக இருக்கிறது. கீர்த்தி சுரேஷும், சாய் பல்லவையும் தெலுங்கு திரையுலகில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி நல்ல வரவேற்பு பெற்றிருக்கும் தசரா படத்திற்காக அவர் டப்பிங் பேசும் வீடியோவை தற்போது தனது சமூக வலைதள ப்பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் வரும் மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு பலரும் ரீல்ஸ் செய்து வரும் நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் கண்ணீருடன் இந்த படத்திற்காக டப்பிங் பேசும் காட்சிகளை அவர் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.! நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment