அபியுடன் செம்ம ரொமான்ஸ் செய்த வெற்றி.! காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் அபி.!

தென்றல் வந்து என்னை தொடும் சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் வழுக்கி விழப் போக இருந்த அபியை வெற்றி தாங்கிப் பிடித்திருக்கிறார். மேலும் வெற்றி சுடரிடம் நடந்து கொள்ளும் முறையை பார்க்கும் பொழுது அபிக்கு வெற்றியுடன் வாழ்ந்த பழைய ஞாபகங்கள் அனைத்தும் நினைவுக்கு வருகிறது. இந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. விஜய் டிவி விஜய் டிவியின் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் சற்று வித்தியாசமான கதையம்சம் கொண்டது. இந்த சீரியலின் கதாநாயகனாக வெற்றி என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் வினோத் பாபுவும் கதாநாயகியாக அபி என்கிற கதாபாத்திரத்தில் நடிகை பவித்ரா ஜனனியும் நடித்து வருகின்றனர். ரவுடியாக இருக்கும் வெற்றி வக்கீல் மகள் அபியை திருமணம் செய்து கொள்கிறார். பின்னர் இவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது குறித்த கதை தான் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலின் கதையாக இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அபியுடன் செம்ம ரொமான்ஸ் செய்த வெற்றி.! காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் அபி.! 1

விளம்பரம்

இந்தத் தொடர் ஒரு கட்டத்தில் முடியும் நிலையில் இருந்தது. பின்னர் தற்போது கதையை மாற்றி அமைத்திருக்கின்றனர். வெற்றிக்கும் அபிக்கும் பிறந்த குழந்தையாக சுடர் என்கிற ஒரு கதாபாத்திரத்தை கொண்டு வந்திருக்கின்றனர். மேலும் அபியும் வெற்றியும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், அபி கலெக்டராகவும் வெற்றி மிகப்பெரிய ரவுடியாகவும் மாறி இருப்பது போல் கதைக்களம் நகர்ந்து இருக்கிறது. தற்போது அபிக்கு எதிரிகளால் ஆபத்து இருக்கிறது. மேலும் சுடரும் வெற்றியும் தங்களை ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்ளாமலேயே நெருங்கி பழகி வருகின்றனர். இதன் காரணமாக வெற்றியை அபிக்கு பாடி கார்டாக நியமிக்கலாம் என்கிற போலீசின் யோசனைப்படி, கலெக்டராக இருக்கும் அபிக்கு பாடி கார்டாக வருகிறார் வெற்றி. மேலும் சுடரும் வெற்றியும் நல்ல நண்பர்கள் என்பதால் வெற்றி அபியின் வீட்டிலேயே தங்க முடிவெடுத்து இருக்கிறார்.

தொடர்புடையவை  கணவர் இறப்புக்கு பின் முதல் முறையாக கண்கலங்கி வீடியோ வெளியிட்ட ஸ்ருதி ஷண்முகப்ரியா.!

அபியுடன் செம்ம ரொமான்ஸ் செய்த வெற்றி.! காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் அபி.! 3
அபியின் வீட்டிலேயே தங்கியிருக்கும் வெற்றி காலையில் எழுந்து வந்து அபி இடம் ஒரு காபி கிடைக்குமா என்று கேட்கிறார் அபியும் பழைய ஞாபகத்திலேயே சரி என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார். பின்னர்தான் அவருக்கு புரிகிறது தற்போது வெற்றியும் அவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்பது் அதன் பின்னர் குளிக்கலாம் என்று குளியலறைக்கு செல்லும்போது அங்கு சோப் வழுக்கி அபி கீழே விழுகிறார். அவரை தாங்கி பிடிக்கிறார் வெற்றி. மேலும் சுடருக்கு வெற்றி சாப்பாடு ஊட்டி கொண்டிருக்கிறார். அப்போது நீ கண்ணை மூடிக்கொள், நான் சாப்பாடு ஊட்டி விடுகிறேன் என்று சொல்கிறார். இதை பார்க்கும் பொழுது அபிக்கு அவரது பழைய ஞாபகங்கள் அனைத்தும் வருகிறது. வெற்றியை புரிந்து கொண்டு அபி விரைவில் அவருடன் இணைவார் என்று தெரிகிறது. தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்…! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment