விமல் நடித்துள்ள தெய்வ மச்சான் திரைப்படம் எப்படி இருக்கு..? முழு திரைவிமர்சனம் இதோ.!

விமல், அனிதா சம்பத், பாலசரவணன் , உள்ளிட்டோர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் தெய்வ மச்சான். தற்போது இந்த படத்தின் விமர்சனம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் விமல். இவருடைய தங்கை அனிதா சம்பத்திற்கு பல இடங்களில் வரன் பார்த்தும் சரியான வரன் அமையாமல் இருந்து வருகிறது. இதனால் விமலின் ஒட்டுமொத்த குடும்பமே மனக்கஷ்டத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கிராமத்தில் பண்ணையாராக இருப்பவரின் தம்பியை அனிதா சம்பத்திற்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் அவருக்க வயது அதிகமாக இருப்பதால் அந்த வரனையும் தட்டி கழித்து விடுகின்றனர். பின்னர் ஒருவழியாக வரன் கிடைக்க இதை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்று விமல் தீவிரம் காட்டி அந்த வரனை பேசி முடிக்கிறார். மேலும் மாப்பிள்ளையின் தங்கையை பார்த்த விமல் அவர் மீதும் காதல் கொள்கிறார்.

விமல் நடித்துள்ள தெய்வ மச்சான் திரைப்படம் எப்படி இருக்கு..? முழு திரைவிமர்சனம் இதோ.! 1
ஏற்கனவே பண்ணையாரின் தம்பியை திருமணம் செய்து வைக்க மறுத்ததால் இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்று பண்ணையார் ஒரு பக்கம் முயற்சி செய்து வருகிறார். இதற்கிடையே விமலின் கனவில் ஒரு சாட்டைக்காரன் அடிக்கடி வந்து கொண்டே இருக்கிறார். அவர் விமலுக்கு தெரிந்தவர்கள் இறக்கப் போகும் செய்தியை முன்கூட்டியே சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த சாட்டைக்காரன் சொல்வது போலவே மரணங்களும் நிகழ்ந்து வருகிறது. இதனிடையே தங்கையின் திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு விமலின் கனவில் வரும் சாட்டைக்காரன், இரண்டு நாட்களில் உன் மச்சான் இறந்து விடுவார் என்று கூறுகிறார். இதனால் பயந்து போன விமல் இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்று முயற்சி செய்கிறார். இறுதியில் அந்த திருமணம் நடந்ததா? விமல் கனவில் வந்த சாட்டைக்காரன் யார்? அந்த விஷயம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.

விளம்பரம்
தொடர்புடையவை  சிகப்பு நிறப் புடவையில் தேவதை போல வந்து நடனம் ஆடிய ஹன்சிகா.! வைரல் வீடியோ.!

விமல் நடித்துள்ள தெய்வ மச்சான் திரைப்படம் எப்படி இருக்கு..? முழு திரைவிமர்சனம் இதோ.! 3

ஒரு கல்யாணத்தில் நிச்சயம் தொடங்கி மறு வீடு வரை நடக்கும் அனைத்து விஷயங்களையும் திரைக்கதையாக எழுதி அதை திகட்டாமல் கொடுத்திருக்கிறார் இயக்குனர் என்று தான் சொல்ல வேண்டும். வழக்கம்போல தனது எதார்த்தமான நடிப்பாலும், கிராமத்து ஸ்டைலிலும் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார் விமல். விமலுக்கே உரித்தான கிராமத்தில் வசிக்கும் சாமானிய இளைஞன் கதாபாத்திரம் அவருக்கு நன்றாக பொருந்தி போகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு பால சரவணன் உடன் சேர்ந்து இவர் செய்த காமெடிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. தங்கையாக நடித்து இருக்கும் அனிதா சம்பத் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். அவர் கதையுடன் ஒன்றி போய் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் பாண்டியராஜன், ஆடுகளம் நரேன், தீபா சங்கர் உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுத்த பணிகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக தீபா ஷங்கரின் காமெடி சிரிப்பு சரவெடியாக இருக்கிறது.

விளம்பரம்

விமல் நடித்துள்ள தெய்வ மச்சான் திரைப்படம் எப்படி இருக்கு..? முழு திரைவிமர்சனம் இதோ.! 5
கேமில் ஜே அலெக்ஸின் கேமரா ஒர்க் திண்டுக்கல்லின் அழகை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது. காட்வின் பின்னணி இசை ஓரளவுக்கு ஓகே. ஆனால் பாடல்கள் எதுவும் பெரிதாக ஒர்க்அவுட் ஆகவில்லை. குடும்ப உறவுகளை வைத்து காமெடி கலந்த படமாக இந்த படத்தை கொடுத்திருக்கிறார் மார்ட்டின் நிர்மல் குமார். திரைக்கதையில் ஆங்காங்கே தொய்வு ஏற்பட்டிருந்தாலும் காமெடி மற்றும் கலக்கல் காமெடிகளால் நம்மை சிரிக்கவும் ரசிக்கவும் வைத்திருக்கிறார் இயக்குனர். மொத்தத்தில் தெய்வ மச்சான்- காமெடி சரவெடி..! இந்த படத்திற்கு தமிழ்க்ளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் – 3.75/5

தொடர்புடையவை  HomeTour வீடியோவில் சிக்கிய வீட்டில் இருந்த முக்கியபொருள்..! பிரச்சனைகளுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா கொடுத்த விளக்கம்..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Tips Tamil

விளம்பரம்

Leave a Comment