அயலான் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் குட்டி டீசர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். இந்த டீசரை பார்க்கும்பொழுது ஏலியனுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் நடுவில் இருக்கும் நட்பு பற்றி இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் மெரினா என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்க்கு அறிமுகமானார். ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த சிவகார்த்திகேயனுக்கு தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து இருபது படங்களுக்கும் மேல் நடித்துள்ள அவர், தற்போது அயலான், மாவீரன் மற்றும் தனது 24-வது படம் ஆகியவற்றை கைவசம் வைத்திருக்கிறார். இதில் மாவீரன் மற்றும் அயலான் திரைப்படங்கள் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இருக்கின்றன. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் காமெடியை கைவிட்டு விட்டு மாவீரன் படத்தில் ஆக்ஷன் பிளாக்பஸ்டரில் இறங்கி இருக்கிறார் சிவகார்த்திகேயன். மாவீரன் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ, பாடல் வீடியோ அனைத்திலும் ஒரு தரமான வடசென்னையைச் சேர்ந்த படமாக இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சரிதா, மிஷ்கின், அதிதி சங்கர் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அடுத்ததாக மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அயலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படம் நகைச்சுவை காமெடி ஜானரில் உருவாகி இருக்கிறது ய. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் சரத் கேல்கர், இஷா கோபிகர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இசைப் புயல் ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இந்த படம் பற்றி சமீபத்தில் பேட்டி அளித்திருந்த படத்தின் தயாரிப்பாளர் இடைவிடாத கடின உழைப்பை மூன்று ஆண்டுகளாக செலுத்தி இந்த படத்தை படமாக்கி இருக்கிறோம். சமரசம் செய்யாமல் மிகுந்த மெறக்கிடலுடன் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக இத்தனை ஆண்டுகள் கடுமையாக பணிபுரிந்து இருக்கிறோம். இந்த படம் 4500க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளை கொண்டு இந்தியாவின் முழு நீள லைவ் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. கற்பனைக்கு அப்பாற்பட்ட அதிசயங்கள் நிறைந்த உலகத்திற்கு செல்ல தயாராக இருங்கள் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் பேட்டியளித்திருந்தார். இது எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தது. இந்த நிலையில் தற்போது படத்தில் இருந்து புதிய வீடியோ ஒன்றை டீசர் போல படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Sony Music South