பிக்பாஸ் தாமரைச்செல்வி தற்போது அவரது மூத்த மகன் சிவாவுடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளார். இவர்கள் அனைவரும் சேர்ந்து சுற்றுலாவிற்கு சென்றிருக்கின்றனர். அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது தாமரைச்செல்வே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. மீண்டும் உங்கள் மூத்த மகனுடன் இணைந்ததில் மகிழ்ச்சி என்று பலரும் தாமரைக்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர். நாடக கலைஞராகவும், மேடை நடிகராகவும் தனது வாழ்க்கையை தொடங்கியவர் தாமரைச்செல்வி. சிறுவயதில் தன் குடும்ப கஷ்டத்தின் காரணமாக மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கிய இவருக்கு அதுவே முழு நேர தொழிலாக மாறிப்போனது. தனது தம்பி, தங்கைகள் என முழு குடும்ப பாரத்தையும் சுமக்க மூத்த பிள்ளையாக இருந்த தாமரைச்செல்வி மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தாமரை செல்வியின் குடும்பத்திற்கு தற்போது ஒரு விடிவு காலம் பிறந்துள்ளது என்றே சொல்லலாம். தாமரைச்செல்வி பிக் பாஸ் சீசன் 5-ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் பின்னர் அவரது வாழ்க்கை சற்று மாறத் தொடங்கியது. அதேபோல் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் தாமரைச்செல்வியின் ரசிகர்களின் உதவியால் தாமரைச்செல்வி தாயாருக்கு ஒரு வீடு ஒன்றையும் கட்டிக் கொடுத்து வருகிறார்.தாமரை செல்வியின் வாழ்க்கை ஒரு கட்டத்தில் மாறத் தொடங்கி இருக்கிறது. தற்போது தாமரைச்செல்வி தனது கணவர் பார்த்தசாரதி மற்றும் மாமியார் மகனுடன் சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஆனால் தாமரைச்செல்விக்கு ஏற்கனவே திருமணம் ஆகி சிவா என்கிற ஒரு மகன் இருந்தார். முதல் திருமணம் சரியாக அமையாத காரணத்தினால் தாமரைச்செல்வி இரண்டாவதாக பார்த்தசாரதி என்பவரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஆனால் தன்னுடைய மகன் சிவா தன்னை புரிந்து கொண்டு தன்னிடம் வருவார் என்று பிக்பாஸில் இருந்த போது அழுது கொண்டே கூறியிருந்தார் தாமரை.

அதேபோல தற்போது தாமரையின் மூத்த மகன் சிவா தனது தாயைத் தேடி சமீபத்தில் வந்திருந்தார். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை தாமரைச்செல்வி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். பலரும் தாமரைச்செல்விக்கு வாழ்த்துக்களை கூறி வந்தன.ர் இந்த நிலையில் மீண்டும் இவர்கள் அனைவரும் இணைந்து சுற்றுலா சென்றுள்ளனர். அந்த புகைப்படங்களை தாமரைச்செல்வியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இத்தனை நாட்களாக பிரிந்து வாழ்ந்து வந்த மகன் தற்போது மீண்டும் தனது தாயுடன் இணைந்து இருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் தாமரை மற்றும் அவரது மகனுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O