படியில் வழுக்கி விழுந்த வசு.! சரியான சமயத்தில் வசுவை காப்பாற்றிய சரஸ்வதி.! நெகிழ்ச்சியான ப்ரோமோ.!

தமிழும் சரஸ்வதியும் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் வசு மாடியில் இருந்து வழுக்கி விழுகிறார். அவரை சரியான சமயத்தில் காப்பாற்றிய சரஸ்வதிக்கு அனைவரும் கையெடுத்து கும்பிட்டு நன்றி சொல்கின்றனர். மேலும் வசுந்தராவிற்கு பிறந்த குழந்தையை முதலில் எடுத்து வந்து சரஸ்வதியிடம் கொடுத்து சந்திரலேகா நன்றி சொல்லுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நெகிழ்ச்சியான அந்த ப்ரோமோவை பார்த்த பலரும் இந்த ப்ரோமோவை பார்த்து கண் கலங்கியதாக கமெண்ட்டுகளில் தெரிவித்து வருகின்றனர். தமிழும் சரஸ்வதியும் தொடர் சற்று வித்தியாசமான கதையம்சம் கொண்ட தொடராக இருந்து வருகிறது. இந்தத் தொடரில் கோதை இண்டஸ்ட்ரீஸ் என்ற ஒரு மிகப்பெரிய நிறுவனத்தை கோதையின் மகன்கள் தமிழ் மற்றும் கார்த்திக் நடத்தி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படியில் வழுக்கி விழுந்த வசு.! சரியான சமயத்தில் வசுவை காப்பாற்றிய சரஸ்வதி.! நெகிழ்ச்சியான ப்ரோமோ.! 1

விளம்பரம்

தற்போது கதைப்படி கோதை குடும்பத்தை பழிவாங்க அர்ஜூன் கோதையின் மகளை திருமணம் செய்து கொண்டு வீட்டிற்குள் நுழைகிறார். இவர் வீட்டிற்குள் வந்த பின்பு பல பிரச்சனைகள் எழுகிறது. தமிழை அவரது தாயார் கோதை கழுத்தைப் பிடித்து வீட்டில் இருந்து வெளியே அனுப்பி விடுகிறார். வெளியே வந்து தனியாக சரஸ்வதி இண்டஸ்ட்ரீஸ் என்று மனைவி பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார் தமிழ். கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்க இரண்டாவது மருமகளாக இருக்கும் கார்த்தியின் மனைவி வசுந்தரா கர்ப்பமாக இருக்கிறார். வசுந்தராவை கவனித்துக் கொள்வதற்கு இத்தனை நாள் சரஸ்வதி வீட்டில் இருந்தார். தற்போது அவர் வீட்டில் இல்லாததால் வசுவை கவனித்துக் கொள்ள ஆள் இல்லை. இந்த வகையில் வசுந்தரா என்று மாடிப்படி ஏறும் பொழுது தெரியாமல் வழுக்கி கீழே விழுந்து மயங்கி கிடக்கிறார். வசுந்தராவிற்கு போன் செய்து கொண்டிருக்கும் சரஸ்வதி வசு பதிலளிக்காததால் பதறிப் போய் வீட்டிற்க்கு ஓடுகிறார்.

தொடர்புடையவை  சன் டிவி சீரியல் ஷூட்டிங்கிற்கு நடுவே மரண குத்தாட்டம் போடும் ஆலியா மானசா.!

படியில் வழுக்கி விழுந்த வசு.! சரியான சமயத்தில் வசுவை காப்பாற்றிய சரஸ்வதி.! நெகிழ்ச்சியான ப்ரோமோ.! 3

விளம்பரம்

அங்கு கீழே கிடக்கும் வசுந்தராவை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். மேலும் உடனடியாக ரத்தம் தேவைப்படுகிறது என்று மருத்துவர்கள் கூற தன்னுடைய இரத்தத்தை கொடுத்து உதவுகிறார் சரஸ்வதி. இதனால் சந்திர கலா, கோதை உள்ளிட்டோர் நெகிழ்ந்து போயிருக்கின்றனர். மேலும் பிறந்த குழந்தையை நேரடியாக எடுத்து வந்து சரஸ்வதியின் கைகளில் கொடுத்து என் மகளையும் காப்பாற்றிய உனக்கு மிக்க நன்றி என்று கூறுகிறார் சந்திரகலா. இதனால் கோதை, சரஸ்வதி உள்ளிட்டோர் கலங்கி அழுகின்றனர். நெகிழ்ச்சியாக இருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment