அஜித்தை தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் என கூறிய ரசிகர்..! உடனே தல செய்த காரியத்தை பாருங்க.!

தல அஜித் குமார் தற்போது நேபாளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். அங்கு அவர் ரசிகர் ஒருவருடன் செல்பி எடுத்துக் கொண்டார். அப்போது அந்த ரசிகர் தல அஜித்தை பார்த்து தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்று கூற உடனே அவரை முறைத்து பார்த்துவிட்டு அங்கிருந்து அஜீத் நகர்ந்து சென்றிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. ஏற்கனவே அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் விஜய் என்று சர்ச்சை கிளம்பி இருக்கும் நிலையில், தற்போது அடுத்த சர்ச்சை கிளம்பி இருக்கிறது. இதை பார்த்த ரஜினி ரசிகர்கள் தற்போது எதிர்வினை ஆற்றி வருகின்றனர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவரை அவரது ரசிகர்கள் செல்லமாக தல என்று அழைப்பது வழக்கமாக இருக்கிறது. தற்போது தனது 62 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித்குமார். அந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க இருக்கிறது. லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி அந்த படத்தை இயக்க இருக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் மே மாதம் தொடங்க இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அஜித்தை தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் என கூறிய ரசிகர்..! உடனே தல செய்த காரியத்தை பாருங்க.! 1

விளம்பரம்

 

தொடர்புடையவை  சிறுவனை விழுங்கிய முதலை.. முதலை வயிற்றில் என் மகன் உயிரோடு இருப்பான்..பெற்றோர்கள் நடத்திய பாச போராட்டம்

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கைவசம் வைத்திருக்கும் நடிகர் அஜித்குமார், படங்களில் இருந்து ஓய்வு கிடைக்கும் நேரத்தில் எல்லாம் பைக் ரைடு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். குறிப்பாக வட இந்திய பகுதிகளிலும் மலைப்பகுதிகளிலும் சாகசம் செய்வதை விரும்பும் மனிதராக அஜித்குமார் இருக்கிறார். கடைசியாக அவர் துணிவு படத்தின் போது கூட அந்த படக்குழுவினருடன் பைக் ரைடு செய்திருந்தார். மஞ்சு வாரியர் உட்பட அனைவரும் அஜித்தின் திறமையை பாராட்டி அவர் சாகசம் செய்யும் புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர். பெரும்பாலும் மீடியா வெளிச்சத்தை விரும்பாத அஜீத், பேட்டிகள் கொடுப்பதில்லை. மேலும் தன்னை பற்றி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பெரிய அளவில் வெளியாவதில் அவருக்கு ஆர்வமும் இல்லை. ஆனால் அவரது ரசிகர்கள் அவர் மீது பொழியும் அன்பு என்றைக்கும் குறைந்தபாடில்லை. அவர் எங்கு சென்றாலும் அவரை அடையாளம் கண்டு கொண்டு, அவரை பின்தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வருகின்றனர்.

விளம்பரம்

அஜித்தை தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் என கூறிய ரசிகர்..! உடனே தல செய்த காரியத்தை பாருங்க.! 3

தற்போது நேபாளுக்குச் சென்றிருக்கும் அஜித்துடன் வட இந்திய ரசிகர் ஒருவர் வீடியோ ஒன்றை எடுத்து இருக்கிறார். செல்ஃபி எடுத்திருக்கும் அவர் அந்த வீடியோவில் அஜித்தை தென்னிந்திய சூப்பர் ஸ்டார் என்று கூறி இருக்கிறார். அவர் அப்படி சொன்னவுடன் அஜித் அந்த இடத்தில் இருந்து விலகி சென்று இருக்கிறார். ஏற்கனவே வாரிசு படத்தின் போது அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று சரத்குமார் பேசியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. ரஜினியின் ரசிகர்கள் பலரும் அதற்கு எதிர்வினையாற்றி இருந்தனர். ரஜினி இருக்கும் வரை அவர்தான் சூப்பர் ஸ்டார் என்று பேசியிருந்தனர். இந்த நிலையில் தற்போது பிரச்சனையில் சிக்க விரும்பாத தல அஜித் குமார், ரசிகர் தன்னை சூப்பர் ஸ்டார் என்று அழைத்ததும் அவரிடம் இருந்து விலகிச் சென்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment