தளபதி வீட்டிற்கே சென்று மார்க் ஆண்டனி பட டீசரை போட்டு காண்பித்த விஷால்.! வெளியான புகைப்படங்கள்.!

மார்க் ஆண்டனி படம் இன்று வெளியாகவுள்ள நிலையில் தற்போது விஷால் மற்றும் படக்குழுவினர் தளபதி விஜயை சந்தித்து டீசரை போட்டு காட்டியுள்ளனர். டீசரை பார்த்த தளபதி படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. விஷால் எஸ்ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் மார்க் ஆண்டனி. இந்தப் படத்தின் டீசர் என்று மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு முன்பாக தளபதி விஜயை படக் குழுவினர் நேரில் சந்தித்து அந்த டீசரை தளபதிக்கு போட்டு காட்டி இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

தளபதி வீட்டிற்கே சென்று மார்க் ஆண்டனி பட டீசரை போட்டு காண்பித்த விஷால்.! வெளியான புகைப்படங்கள்.! 1

விளம்பரம்

அன்பானவன் அடங்காதவன் அசராதவன், திரிஷா இல்லனா நயன்தாரா, பஹீரா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் தற்போது விஷாலை வைத்து மார்க் ஆண்டனி என்கிற படத்தை இயக்கி வருகிறார். விஷாலின் பிறந்தநாள் அன்று இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டருடன் வெளியாகி இருந்தது. சில காலமாக போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் விஷால் தற்போது சற்று வித்தியாசமாக ரவுடி கெட்டப்பில் கலக்கி இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விஷாலுக்கு கடைசியாக வெளியான சில படங்கள் சரியாக கை கொடுக்கவில்லை.

தொடர்புடையவை  எப்படி இருக்கிறது செம்பி திரைப்படம்.! முழு திரை விமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5)

தளபதி வீட்டிற்கே சென்று மார்க் ஆண்டனி பட டீசரை போட்டு காண்பித்த விஷால்.! வெளியான புகைப்படங்கள்.! 3

விளம்பரம்

மிகவும் எதிர்பார்த்த லத்தி திரைப்படம் சரியான வரவேற்பு பெறவில்லை. எனவே தற்போது அடுத்த படத்தை கவனத்துடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷால் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, இயக்குனர் செல்வராகவன், நிழல்கள் ரவி, ஒய் ஜி மகேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்ட மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்து வருகின்றனர். மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் விபத்து நடைபெற்று நூலிலையில் எஸ் ஜே சூர்யாவும் விஷாலும் உயிர் தப்பியிருந்தனர்.

தளபதி வீட்டிற்கே சென்று மார்க் ஆண்டனி பட டீசரை போட்டு காண்பித்த விஷால்.! வெளியான புகைப்படங்கள்.! 5

விளம்பரம்

இந்த நிலையில் சமீபத்தில் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து கேக் வெட்டி படக்குழுவினர் பிரிந்து இருந்தனர். தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை 6:30 மணிக்கு படத்தின் டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. டீசர் வெளியாவதற்கு முன்பாக தளபதி விஜயை படக்குழுவினர் நேரில் சந்தித்திருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

தளபதி வீட்டிற்கே சென்று மார்க் ஆண்டனி பட டீசரை போட்டு காண்பித்த விஷால்.! வெளியான புகைப்படங்கள்.! 7
தளபதியின் வீட்டிற்க்கே நேராக சென்ற அவர்களை தளபதி அன்புடன் வரவேற்று இருக்கிறார். மேலும் தளபதிக்கு டீசரை போட்டு காட்டி படக்குழுவினர் வாழ்த்தும் பெற்றிருக்கின்றனர். விஷால் மற்றும் படக்குழுவினருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் இன்று மாலை வெளியாகும் டீசரை எதிர்பார்த்து காத்து இருப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  வாரிசு படத்தின் 3வது போஸ்டரும் வெளியானது..பைக்-ல சும்மா கெத்தா உக்காந்து இருக்காரே நம்ம தளபதி,,உங்களுக்கு வயசே ஆகாதா?

விளம்பரம்

Leave a Comment