அதிதி சிவகார்த்திகேயன் குரலில் மாவீரன் படத்தின் 2nd சிங்கிள் “வண்ணாரப்பேட்டயிலே” வெளியானது.!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்திலிருந்து வண்ணாரப்பேட்டையில என்கிற பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவை படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கின்றனர். இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி சங்கர் ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் தான் மாவீரன். இந்த படம் வருகிற ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.்தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த படத்தில் இருந்து ஒவ்வொரு அப்டேட்டுகளாக வெளிவர தொடங்கி இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் படத்தொகுப்பு வேலைகள் முடிந்து சிவகார்த்திகேயன் டப்பிங் பணிகளை தொடங்கி இருப்பது போன்ற வீடியோ இணையத்தில் வெளியானது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதிதி சிவகார்த்திகேயன் குரலில் மாவீரன் படத்தின் 2nd சிங்கிள் "வண்ணாரப்பேட்டயிலே" வெளியானது.! 1

விளம்பரம்

இந்த நிலையில் படத்தில் இருந்து ஒவ்வொரு அப்டேட்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது படத்தில் இருந்து வண்ணாரப்பேட்டையில என்கிற பாடலை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். இந்தப் பாடலை சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி சங்கர் பாடியிருக்கிறார். மேலும் இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இந்த படத்தை இயக்கி வருவதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான ப்ரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. இதனால் அடுத்த கதையை மிகவும் கவனத்துடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படம் வடசென்னையை மையமாகக் கொண்ட ஒரு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடையவை  என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழர்களுக்கு இந்த விருதை பறைசாற்றுகிறேன்! ரஜினி நெகிழ்ச்சி!

அதிதி சிவகார்த்திகேயன் குரலில் மாவீரன் படத்தின் 2nd சிங்கிள் "வண்ணாரப்பேட்டயிலே" வெளியானது.! 3
இந்த படம் வருகிற ஜூலை 14ஆம் தேதி தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட்ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியிருக்கும் இந்த வண்ணாரப்பேட்டையில பாடலை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Saregema Tamil

விளம்பரம்

Leave a Comment