பிளாக் ஷீப் Youtube சேனல் நடிகர்கள் இணைந்து நடித்துள்ள “பாபா ப்ளாக் ஷீப்” படத்தின் ட்ரைலர் இதோ..!

பிரபல யூட்யூப் புகழ் ராஜ்மோகன் இயக்கி வரும் “பாபா பிளாக் ஷீப்” திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. பள்ளி குழந்தைகளின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தை பிளாக் ஷீப் என்கிற youtube சேனலில் நடித்து வரும் அனைவரும் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய இடைவெளிக்கு பின்னர் விருமாண்டி படத்தின் மூலமாக பிரபலமான அபிராமி இந்த படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கிடையே இரண்டு குழுக்களாக இருப்பவர்களுக்கு இடையே நடக்கும் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருப்பதாக தெரிகிறது. தற்போது இந்த படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த படம் குறித்து இயக்குனர் ராஜ்மோகன் கூறும் பொழுது, “இந்த படம் ஒரு அழகான பள்ளிக்குழந்தைகளை மையமாக டிராமா திரைப்படம். பள்ளி குழந்தைகளின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு படமாக இது இருக்கும் என்று கூறியிருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிளாக் ஷீப் Youtube சேனல் நடிகர்கள் இணைந்து நடித்துள்ள "பாபா ப்ளாக் ஷீப்" படத்தின் ட்ரைலர் இதோ..! 1

விளம்பரம்

இந்த படத்தில் குழந்தையை பிரசவிப்பது முதல் பள்ளிக்கூடம் வரை சுமக்கும் ஒரு அன்னை கதாபாத்திரம் இருந்ததாகவும் அதற்காக அபிராமியை அணுகிய போது அவருக்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்ததாகவும், தான் நடிப்பதாக கூறி ஒவ்வொரு காட்சியிலும் அறிமுக நடிகை போல் கேட்டு கேட்டு நடித்து அவரது கதாபாத்திரத்தை அழகாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் என்று இயக்குனர் ராஜ்மோகன் கூறினார். மேலும் அபிராமியின் நடிப்பை பார்த்து ஒரு காட்சியில் உணர்ச்சிகரமாக அவர் நடித்ததை பார்த்து ஒட்டுமொத்த படக் குழுவும் கண்கலங்கி எழுந்து கைகட்டி இருந்ததாக பேசி இருந்தார். அந்த காட்சியை திரையில் பார்க்கும் பொழுது ரசிகர்களும் கண் கலங்குவார்கள் என்றும் அபிராமிக்கு மீண்டும் இந்த படத்தின் மூலமாக ஒரு திருப்புமுனை ஏற்படும் என்றும் பேசியிருந்தார். மொத்த படப்பிடிப்பும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்தில் ஆர் ஜே விக்னேஷ் காந்த், மதுரை முத்து, சுப்பு பஞ்சு, சுரேஷ் சக்கரவர்த்தி, போஸ் வெங்கட் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

தொடர்புடையவை  படத்தில் இருந்து முதல் ப்ரோமோ வெளியானது.! வந்தியத்தேவன் காட்சிகளை முதல் ப்ரோமோவாக வெளியிட்டது படக்குழு

பிளாக் ஷீப் Youtube சேனல் நடிகர்கள் இணைந்து நடித்துள்ள "பாபா ப்ளாக் ஷீப்" படத்தின் ட்ரைலர் இதோ..! 3

விளம்பரம்

மேலும் பிளாக் ஷீப் யூட்யூப் சேனலில் நடித்து வந்த ஆயாஸ், நாகேந்திர பிரசாத், அம்மு அபிராமி, அதிர்ச்சி அருண் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits. Saregama Tamil

விளம்பரம்

Leave a Comment