அதிரடி ஆக்‌ஷனில் பட்டையை கிளப்பிய விக்ரம் பிரபு..! “பாயும் ஒளி நீ எனக்கு” ட்ரைலர் வெளியானது..!

விக்ரம் பிரபு நடித்துள்ள பாயும் ஒளி நீ எனக்கு படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. கும்கி என்னும் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் விக்ரம் பிரபு. சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான இவரின் முதல் படமே மிகப்பெரிய வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து இவன் பெற மாதிரி வாகா அரிமா நம்பி சிகரம் தொடு வெள்ளைக்கார தெரு கொண்ட பல படங்களில் நடித்தார் சில படங்கள் பெரியது வெற்றி பெற்ற புகைப்படம் சரியாக ஓடவில்லை. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் டாணாக்காரன். பின்னர் இவர் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும், பார்பேந்திர பல்லவன் என்ற முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதிரடி ஆக்‌ஷனில் பட்டையை கிளப்பிய விக்ரம் பிரபு..! "பாயும் ஒளி நீ எனக்கு" ட்ரைலர் வெளியானது..! 1

விளம்பரம்

தற்போது கைவசம் ரெய்டு மற்றும் பாயும் ஒளி நீ எனக்கு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் பாயும் ஒளி நீ எனக்கு படம் தற்போது முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து தனஞ்ஜெயா, வாணி போஜன், விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை கார்த்திக் அத்வைத் எழுதி இயக்கியுள்ளார். மேலும் எஸ்பி சினிமாஸ் சார்பில் கார்த்திக் அத்வைத்தே படத்தை தயாரித்தும் இருக்கிறார். சாகர் என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்த படம் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. கண் தெரியாத கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ளார். இந்த படம் பற்றி இயக்குனர் கூறியதாவது, விக்ரம் பிரபு இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறினார். ட்ரைலரை பார்க்கும் போதும் அது போல ஒரு பக்கா ஆக்‌ஷன் ப்ளாக் திரைப்படமாக இருக்கும் என்று தெரிகிறது.

தொடர்புடையவை  உங்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும்.. மறுமணம் குறித்த ரசிகர்களின் கேள்விக்கு நச் என பதில் அளித்த அமலா பால்

அதிரடி ஆக்‌ஷனில் பட்டையை கிளப்பிய விக்ரம் பிரபு..! "பாயும் ஒளி நீ எனக்கு" ட்ரைலர் வெளியானது..! 3

விளம்பரம்

தற்போது இந்த படத்தின் ட்ரைலரை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Divo Music

விளம்பரம்

Leave a Comment