ராவணன் மண்டை டபுள் டக்கர் பஸ் மாதிரி இருக்கு.! ஆதிபுருஷ் படத்தை பங்கம் செய்துவிட்ட ப்ளூ சட்டை மாறன்.!

இயக்குனர் ஓம்ராவத் இயக்கத்தில் நேற்று இந்தியா முழுவதும் வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் குறித்து தற்போது ப்ளூசட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்து இருக்கிறார். இந்தப் படம் வால்மீகி எழுதிய ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்தது. ராமர் வனவாசம் சென்ற பின்பு ராவணன் சீதையை கடத்திக் கொண்டு இலங்கைக்கு சென்ற பின்னர் ராமர் பாலம் அமைத்து சீதையை மீட்கும் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. இந்த படம் குறித்து தனது விமர்சனங்களை கூறிய ப்ளூ சட்டை மாறன் ராவணன் இலங்கைக்கு சீதையை கடத்தி சென்றப் பின்னர் ராமர் அங்கு சென்று இராவணனிடம் சண்டையிட்டு சீதையை மீட்க வேண்டும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராவணன் மண்டை டபுள் டக்கர் பஸ் மாதிரி இருக்கு.! ஆதிபுருஷ் படத்தை பங்கம் செய்துவிட்ட ப்ளூ சட்டை மாறன்.! 1

விளம்பரம்

இந்த ஒரு சீனை இரண்டாம் பாகம் முழுவதும் எடுத்து வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு சீனும் மிக நீளமாக இருந்தது. கதையில் ஒரு டீட்டைல் கூட இல்லை. லட்சுமணன் கதாபாத்திரம் எவ்வளவு முக்கியமானது? வாலி சுக்ரீவன் ஆகியோருக்கு ஒரு பிண்ணனி இருக்கும். இதெல்லாம் ஒன்றுமே இல்லாமல், கதையில் ஒரு விளக்கமும் இல்லாமல் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ராமாயணத்தை தெருக்கூத்து, நாடகம், சீரியல் என்று நாம் பல்வேறு வடிவங்களில் பார்த்திருக்கிறோம். இது ஏற்கனவே வந்த கதை இல்லை, வந்து நொந்த கதை. வழவழவென்று ஒரு ஆர்வமும் இல்லாமல் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.

தொடர்புடையவை  "கூல் நானே சூடாகிட்டேன் யாஷிகாவை பாத்து"!! மேடையிலேயே ஜொள்ளு வழிந்த கூல் சுரேஷ்!!

ராவணன் மண்டை டபுள் டக்கர் பஸ் மாதிரி இருக்கு.! ஆதிபுருஷ் படத்தை பங்கம் செய்துவிட்ட ப்ளூ சட்டை மாறன்.! 3

விளம்பரம்

இவர்கள் கதையில் மாறுதல் செய்திருக்கிறார்கள் என்று சொன்னால் நாம் வழக்கமாக ராவணனை 10 தலையுடன் பார்த்திருப்போம். வலது பக்கம் 5 இடது பக்கம் 5 அப்படித்தான் இருக்கும்.  ஆனால் இங்கு மேலே 5 கீழே 5 தலையுடன் டபுள் டக்கர் பஸ் போல காட்டுகிறார்கள். ராவணன் பைல்ஸ் ஆரேஷன் முடிந்து வருபவர் போல் நடந்து வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு புள்ளிங்கோ போல ஹேர் கட் செய்து இருக்கிறார்கள். இருட்டுக்குள் சிஜி ஒர்க் செய்திருக்கிறார்கள். நைட் effect-ல் சிஜி செய்தாலே பார்ப்பவர்களை ஏமாற்றும் வேலையாக தான் இருக்கும். அப்போதுதான் தவறுகளை கண்டுபிடிக்க முடியாது என்று நினைக்கிறார்கள். இது ஒரு இத்துப்போன படம். மணிசார் போல இதுதான் சேர நாடு, இதுதான் சோழ நாடு, இதுதான் குந்தவை என்று நம்மை ஏமாற்றி நம்ப வைத்து கல்லா கட்ட தெரியாமல் இந்த படத்தை எடுத்து இருக்கிறார்கள்.

ராவணன் மண்டை டபுள் டக்கர் பஸ் மாதிரி இருக்கு.! ஆதிபுருஷ் படத்தை பங்கம் செய்துவிட்ட ப்ளூ சட்டை மாறன்.! 5

விளம்பரம்

இது ஒரு அறுத பழசான கதை. இராமர் மார்க்கெட்டையே காலி பண்ணி விட்டார்கள். வடிவேலுவின் படத்தில் வருவது போல் மாட்டு அயிட்டத்தையும் மனுஷ அயிட்டத்தையும் மிக்ஸ் பண்ணி அடித்து விட்டார்களே என்பது போல இருக்கிறது. இப்படி ஒரு முட்டாள்தனமான படத்தை எடுத்துவிட்டு டீசர் ஒன்றை காண்பித்தார்கள். அப்போது பலர் விழுந்து விழுந்து சிரித்தார்கள். பிறகு அனுமாருக்கு ஒரு சீட்டு ஒதுக்குகிறேன் என்று சொல்லி அதை பார்த்தும் பலர் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இந்த இரண்டு விளம்பரமும் இல்லை என்றால் இப்படி ஒரு படம் வந்ததே யாருக்கும் தெரியாமல் போயிருக்கும்.

தொடர்புடையவை  ஸ்பீடா போனது தப்பு தான் என்ன மன்னிச்சிடுங்க.! வீடியோ வெளியிட்டு கதறும் டிடிஎஃப் வாசன்

ராவணன் மண்டை டபுள் டக்கர் பஸ் மாதிரி இருக்கு.! ஆதிபுருஷ் படத்தை பங்கம் செய்துவிட்ட ப்ளூ சட்டை மாறன்.! 7

விளம்பரம்

“நின்று போன கடிகாரம் கூட இரண்டு முறை சரியாக மணி காட்டும்” என்று சொல்வார்கள். அது போல முட்டாள்தனமான இந்த படத்திற்கு இந்த இரண்டு விளம்பரமும் உதவி இருக்கிறது, என்று சொல்லி கடுமையான விமர்சனங்களை ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்தார். நீங்களும் அவர் கூறிய அந்த விமர்சனத்தை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்…! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Tamil Talkies

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment