தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் சுடரின் பிறப்பு பற்றிய உண்மையை தேடி வெற்றி ராஜஸ்தான் மாநிலத்தில் அலைந்து கொண்டிருக்கிறார். அதில் அபிக்கு பிரசவம் பார்த்தவரைத் தேடி அவர் அலைந்து கொண்டிருக்கிறார். இந்த செய்தி எப்படியோ கண்மணிக்கு கிடைக்க, கண்மணி உடனடியாக போன் செய்து அதை அபியிடம் தெரிவிக்கிறார். சுடர் பற்றிய உண்மைகளை வெற்றி தெரிந்து கொள்ளக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கும் அபி, வெற்றியை தடுப்பதற்காக அவரது பின்னால் அலைந்து கொண்டிருக்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. வெற்றிக்கும் அபிக்கும் பிறந்த குழந்தைதான் சுடர். ஆனால் இந்த உண்மை வெற்றிக்கே தெரியாது. ஒருநாள் எதிர்பாராத விதமாக சுடரும் வெற்றியும் சந்தித்துக் கொள்ள இருவரும் நண்பர்களாக பழகி வருகின்றனர். இந்த நிலையில் கலெக்டராக இருக்கும் அபி சுடர் வெற்றியுடன் பழகுவதை விரும்பவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் சுடர்தான் தன் மகள் என்பதை வெற்றி எப்படியோ தெரிந்து கொள்கிறார். இதை எப்படியாவது நிரூபணம் செய்ய வேண்டும் என்பதற்காக அபி கலெக்டராக படித்துக் கொண்டிருந்தபோது இருந்த மாநிலங்களில் சுடர் பற்றிய அலைகிறார் உண்மைகளை தெரிந்து கொள்வதற்காக தேடி அலைகிறார். அபிக்கு பிரசவம் பார்த்தவர்களை நேரில் சந்தித்து சுடர் பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்வதற்காக தற்போது ராஜஸ்தான் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தேடி அலைந்து கொண்டிருக்கிறார் வெற்றி. ஆனால் வெற்றிக்கு சுடரின் பிறப்பு பற்றிய உண்மைகள் தெரிந்து விடக் கூடாது என்பதில் அபி தீவிரமாக இருக்கிறார். இதற்கிடையே வெற்றி ராஜஸ்தானில் இருக்கும் உண்மையை கண்மணி அபிக்கு போன் செய்து கூறுகிறார். கண்மணி வெற்றியை திருமணம் செய்து கொள்ளும் நோக்கில், வெற்றி மீண்டும் அபி மற்றும் சுடருடன் இணைந்து விடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார். இதனால் கண்மணி வெற்றிக்கு எதிராக இது போன்ற சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதனால் அபி வெற்றியை தடுக்கும் நோக்கில் அபியும் வெற்றிக்குப் பின்னாலேயே ஓடிக் கொண்டிருக்கிறார். இதனால் வெற்றி சுடர் குறித்த உண்மையை கண்டுபிடிப்பானா இல்லையா? அதற்கு முன்பாகவே அபி வெற்றியை தடுத்து விடுவாளா? என்பது குறித்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தொடரில் நேயர்கள் பலரும் வெற்றி தன்னுடைய மகள்தான் சுடர் என்பதை விரைவில் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை கமெண்ட்டுகளில் வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television