ராதிகா சொன்ன ஒரு வார்த்தை, அதிர்ச்சியில் உறைந்து போன கோபி.! செம்ம காமெடியான ப்ரோமோ.!

பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்க்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் கோபியும் ராதிகாவும் சந்தோசமாக இருப்பதற்காக வெளியூருக்கு டூருக்கு சென்றுள்ளனர். அங்கு பாக்கியாவின் தொல்லை இல்லாமல் சந்தோசமாக இருக்கலாம் என்று சொல்லி ராதிகாவிடம் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கும் நிலையில் பாக்கியா அந்த இடத்திற்கும் வந்து விடுகிறார். இதனால் கோபி அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார். அந்த காமெடியான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியின் டாப் ஹிட் தொடர்களில் ஒன்றான பாக்கியலட்சுமி தற்போது விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. இதில் கதாநாயகன் கோபிக்கு பாக்கியா, ராதிகா என்று இரண்டு மனைவிகள். பாக்கியாவுக்கு திருமணம் ஆன பிள்ளைகள் இருக்கும் நிலையில் அவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்து கொண்டார் கோபி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராதிகா சொன்ன ஒரு வார்த்தை, அதிர்ச்சியில் உறைந்து போன கோபி.! செம்ம காமெடியான ப்ரோமோ.! 1

விளம்பரம்

ஆனால் ராதிகாவை திருமணம் செய்துகொண்ட நாள் முதல் கோபிக்கு துளியும் நிம்மதி இல்லை . அளவுக்கு அதிகமாக குடிக்க தொடங்கிய அவரை கோபியின் தாயார் அவரது வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். அவரை தொடர்ந்து ராதிகாவும் பாக்கியாவின் வீட்டிற்கே வந்துவிட்டார். ராதிகா பாக்கியாவின் வீட்டிற்கு வந்த நாள் முதல் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இதற்கிடையில் பாக்கியா ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்க்காக வகுப்புக்கு செல்கிறார். அங்கு அவருக்கும் பழனிசாமி என்பவருக்கும் நட்பு ஏற்படுகிறது. ஆனால் இதை கோபி தவறாக புரிந்து கொள்கிறார். பழனிசாமிக்கு பாக்கியா பெண் பார்ப்பதை தவறாக புரிந்து கொள்ளும் கோபி பாக்கியவை தான் பழனிசாமி திருமணம் செய்து கொள்ள போவதாக தவறாக புரிந்து கொள்கிறார்.

தொடர்புடையவை  ஜாங்கிரி மதுமிதாவாக மாறிய பரத், சந்தானமாக மாறிய குரேஷி.! இந்த வாரம் செம்ம அலப்பறை இருக்கு

ராதிகா சொன்ன ஒரு வார்த்தை, அதிர்ச்சியில் உறைந்து போன கோபி.! செம்ம காமெடியான ப்ரோமோ.! 3

விளம்பரம்

இந்த நிலையில் பாக்யா இன்னும் ஒரு மாதத்தில் 18 லட்சம் ரூபாயை கொடுத்து வீட்டை மீட்டு விடுவதாக கோபியிடம் சவால் விட்டு இருக்கிறார். அதற்காக பழனிசாமியின் உதவியுடன் அவர் ஒரு சமையல் கான்ட்ராக்ட்டை பிடித்து இருக்கிறார். அதற்காக அவர் ஊருக்கு கிளம்பி சென்று இருக்கிறார். அதே ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி இருக்கும் கோபி ராதிகாவுக்கு பாக்கியவும் பழனிசாமியும் ஒரே இடத்தில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செம்ம காமெடியாக இருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..! 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment