எப்படி இருக்கிறது மாமன்னன் திரைப்படம்.? முழு திரைவிமர்சனம்.! Tamilgltiz ரேட்டிங் (?/5)

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்று தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் மாமன்னன்மாமன்னன். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க கீர்த்தி சுரேஷ் பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். தற்போது இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படம் குறித்த முழு விமர்சனத்தை இந்த பதிவில் காணலாம். சேலம் மாவட்டத்தில் ஒரு தனித் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வடிவேலு(மாமன்னன்) இருக்கிறார். அதே கட்சியில் மாவட்ட செயலாளராக பஹத் பாஸில்(ரத்னவேல்) இருந்து வருகிறார். பகத் பாசில் ஒரு உயர் ஜாதியை சேர்ந்தவர். எம்எல்ஏவாகவே இருந்தாலும் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் தான் பட்டியல் சமூகத்தினை சேர்ந்தவர்கள் இருக்க வேண்டும் என்கிற மனநிலையில் இருக்கிறார். இதனால் எம்எல்ஏ வை தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கவே விரும்புகிறார். வடிவேலுவின் மகனாக உதயநிதி ஸ்டாலின் அதிவீரன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

எப்படி இருக்கிறது மாமன்னன் திரைப்படம்.? முழு திரைவிமர்சனம்.! Tamilgltiz ரேட்டிங் (?/5) 1
இவர் தனது தந்தையின் அரசியல் விவகாரங்களில் தலையிடுவதில்லை. மேலும் தனியாக தற்காப்பு பயிற்சி மையம் ஒன்றையும் நடத்தி வருகிறார். உதயநிதி ஸ்டாலினின் கல்லூரி தோழியான லீலா (கீர்த்தி சுரேஷ்) அதே பகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் மாணவர்களுக்கு இலவசமாக போட்டி தேர்வு படிப்பதற்கான ஒரு மையம் ஒன்றை நடத்தி வருகிறார். கீர்த்தி சுரேஷ் இலவசமாக இந்த மையத்தை நடத்தி வருவதால், தான் நடத்தி வரும் பயிற்சி மையத்தில் சேர்க்கை குறைகிறது என்று சொல்லி ஃபஹத் பாசிலின் அண்ணன் கீர்த்தி சுரேஷுக்கு தொல்லை கொடுக்கிறார். மேலும் அவர் நடத்திவரும் பயிற்சி மையத்தையும் அடித்து நொறுக்குகிறார். இதனால் ஆத்திரமடைந்த உதயநிதி ஸ்டாலின், தனது நண்பர்களுடன் சேர்ந்து பஹத் பாசிலின் அண்ணன் நடத்தி வரும் பயிற்சி மையத்தின் மீது தாக்குதல் நடத்துகிறார். பிரச்சனையை தீர்ப்பதற்காக பஹத் பாஸில் வடிவேலுவை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போதும் அங்கு அடிதடி நடத்துகிறது. தனக்கு கீழ் கைகட்டி நின்றவர்கள் தனக்கு எதிரே உட்கார்ந்து பேசும் அளவிற்கு தைரியமாக வளர்ந்து வந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத பஹத் பாசில் வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலினை பழிவாங்க துடிக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ், தமன்னா நடிக்கும் வேதாளம் தெலுங்கு ரீமேக் "போலா ஷங்கர்" ட்ரைலர் இதோ.!

எப்படி இருக்கிறது மாமன்னன் திரைப்படம்.? முழு திரைவிமர்சனம்.! Tamilgltiz ரேட்டிங் (?/5) 3
இந்த ஆதிக்க மனப்பான்மையிலிருந்து மாமன்னன்(வடிவேலு) தப்பினானா? மாமன்னனை அரசியல் ரீதியாகவும் சாதி ரீதியாகவும் பழிவாங்க துடிக்கும் பஹத் பாஸிலின் எண்ணம் நிறைவேறியதா? என்பதுதான் படத்தின் மீதிக் கதை. பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜின் அடுத்த சாதிய கட்டமைப்புக்கு எதிரான ஒரு தரமான படமாக இந்த படம் வந்திருக்கிறது. எம்எல்ஏவாக இருந்த போதிலும் தாழ்த்தப்பட்ட ஜாதி என்பதால் எவ்வளவு துன்பங்களை அனுபவிக்க வேண்டி இருக்கிறது என்பதை வடிவேலு தன்னுடைய அழகான நடிப்பின் மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறார். அரசியல் கட்சியாக இருந்த போதிலும் சாதி ஆதிக்க மனநிலை உள்ளவர்களே கோலோச்சுவதை அழகாக படம் பிடித்து காட்டியிருக்கும் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாக செய்து கொண்ட அரசியல்வாதியான உதயநிதி பாராட்டிய ஆக வேண்டும். நீண்ட இடைவெளிக்கு பின்னர் நம்மையெல்லாம் சிரிக்க வைத்த வடிவேலு பல இடங்களில் நம்மை கண்கலங்க வைத்து சிறந்த நடிகராக தன்னை நிரூபித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அதிகாரத்தில் இருக்கும் போதிலும் சாதிய கொடுமைகளுக்கு எதிராக தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று ஏக்கத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் கண்கலங்க வைக்கிறார் வடிவேலு.

தொடர்புடையவை  மலேசியாவில் சென்று மாஸ் செய்த மாதவன் மகன்.! 5 தங்க பதக்கங்களை வாங்கி குவித்த வேதாந்த்.!

எப்படி இருக்கிறது மாமன்னன் திரைப்படம்.? முழு திரைவிமர்சனம்.! Tamilgltiz ரேட்டிங் (?/5) 5
முதல் பாதி மிக மெதுவாக சென்ற போதிலும் இரண்டாவது பாகம் விறுவிறுப்பை ஏற்படுகிறது. ரஹ்மானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் வலு சேர்த்து இருக்கிறது. ராசா கண்ணு, நெஞ்சமே நெஞ்சமே ஆகிய பாடல்கள் கதைக்கு கூடுதல் வலுவை சேர்த்து இருக்கின்றன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இடைவேளை காட்சி தனுஷ் கூறியது போலவே கைத்தட்டல்களைப் பெறுகிறது. வடிவேலுவும் உதயநிதி ஸ்டாலினும் கையில் கத்தியை வைத்து அமர்ந்திருக்கும் காட்சிகள் கைதட்டல்களை பெறுகிறது. பஹத் பாசில் வழக்கம் போல ஒவ்வொரு காட்சியிலும் நமக்கு கோபம் வரும் அளவிற்கு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது உடல் மொழியும் கண்களிலேயே நடிக்கும் திறமையும் காட்சிக்கு காட்சியை நம்மை சிலிர்க்க வைக்கிறது. முதல்வராக வரும் லால், கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் தங்களது சரியான பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர். தனித் தொகுதியில் நடக்கும் அரசியல், அவர்கள் மீது செலுத்தப்படும் அதிகாரங்கள் என தேர்தல் அரசியலில் நிகழும் எதார்த்தமான கருத்தை வெளிப்படையாக பேசி இருக்கிறது மாமன்னன்.

விளம்பரம்
தொடர்புடையவை  படம் ரொம்ப அருமையா இருக்கு.. நானே வருவேன் படத்தை புகழ்ந்து தள்ளிய ப்ளூ சட்டை மாறன்

எப்படி இருக்கிறது மாமன்னன் திரைப்படம்.? முழு திரைவிமர்சனம்.! Tamilgltiz ரேட்டிங் (?/5) 7
அனைத்து தடைகளையும் மீறி மீண்டும் சட்டசபைக்குள் ஒரு எம்எல்ஏவாக மாமன்னான வடிவிலே நுழைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு ட்விஸ்டுடன் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறளை மாமன்னன் கூறும் பொழுது ஒட்டுமொத்த திரையரங்கமும் கைத்தட்டல்களால் அதிர்கிறது. இயக்குனரின் வெற்றி அந்த காட்சியிலேயே உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தத்தில் மாமன்னன் – தரம். மாமன்னன் படத்திற்கு தமிழ்கிளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் 3.5/5

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Sony Music South

விளம்பரம்

Leave a Comment