ஈரமான ரோஜாவே சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தேவி பிரியாவிற்கு சில துர்போதனைகளை சொல்லி பிரியா மற்றும் காவியாவை பிரிக்க திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கு பிரியாவும் உடன்பட்டு இருப்பது போல தெரிகிறது. தேவியின் துர்போதனைகளை கேட்டு பிரியா மனம் மாறி இருப்பதாக தெரிகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே தொடர் சற்று வித்தியாசமான கதையம்சம் கொண்டது. இதில் பார்த்திபன் மற்றும் ஜீவா என்கிற அண்ணன் தம்பிகள் இருக்கிறார்கள். அண்ணன் பார்த்திபனுக்கு பிரியா என்கிற பெண்ணை திருமணம் செய்ய நிச்சயம் செய்திருக்கிறார்கள். பார்த்திபனும், பிரியாவும் திருமணம் செய்து கொள்ள இருப்பதால் பார்த்திபன் தம்பி ஜீவாவும், பிரியாவின் தங்கை காவியாவும் காதலித்து வருகின்றனர். ஆனால் பார்த்திபனின் திருமணத்தன்று பிரியா கடத்தப்பட்டு விட்டதால் தம்பி காதலித்து வந்த காவியாவை பார்த்திபனுக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். இதனால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனது தம்பியும் காவியாவும் காதலித்து வரும் விஷயம் தெரியாமலேயே காவியாவை திருமணம் செய்து கொள்கிறார் பார்த்திபன். அதேபோல தம்பி ஜீவாவிற்கு அக்கா பிரியாவை திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர். இந்த குழப்பம் இது நாள் வரையிலும் நீடித்து வந்தது. ஒரு கட்டத்தில் ஜீவாவும் காவியாவும் காதலித்து வந்த விஷயம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்து விடுகிறது. இந்த விஷயம் தெரிந்து பார்த்திபனின் பிரியாவும் மிகவும் உடைந்து போய் விடுகின்றனர். இந்த விஷயத்தை இத்தனை நாள் தங்களிடமிருந்து மறைத்து வைத்து விட்டதாக அவர்கள் உடைந்து போயிருக்கின்றனர். இதற்கிடையில் பார்த்திபன் காவியாவை ஏற்றுக்கொண்டு வாழத் தொடங்கி இருக்கிறார். தற்போது கதைப்படி காவியா கர்ப்பமாக இருக்கிறார். ஆனால் இன்னொரு ஜோடிகளாக இருக்கும் ஜீவா மற்றும் பிரியா இன்னும் சேராமலேயே இருக்கின்றனர். பிரியாவிற்கு ஜீவா மீது இன்னும் நம்பிக்கை வரவில்லை. ஜீவா இன்னமும் காவியா பேச்சை கேட்டுக்கொண்டு இருப்பதாக பிரியா நம்பிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் மாடியில் இருந்து காய்ந்து துணிகளை காவியா எடுத்துக்கொண்டு வருகிறார். அப்போது தவறுதலாக ஜீவாவின் சட்டையை எடுத்துக் கொண்டு வந்து விட்டார். அதை ஜீவாவிடம் காவியா கொடுத்துக் கொண்டிருந்தபோது பிரியா அதை மாடியில் இருந்து பார்த்து விட்டார். இதை கவனித்த தேவி பிரியாவிடம் வந்து காவியாவிடமிருந்து ஜீவாவை பிரிக்க வேண்டும் என்றால் ஜீவாவும் நீயும் தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று சொல்லி சில துர்போதனைகளை கொடுக்கிறார். இதை கேட்கும் பிரியா யோசனையில் ஆழ்கிறார். இதனால் பிரியா தேவியின் பேச்சை கேட்பாரா? கதை இப்படியாக நகருமா? பிரியா ஜீவாவை அழைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் போவாரா? என்பதெல்லாம் தெரியவில்லை. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television