கர்ப்பமாக இருப்பதை அறிவித்த சின்னத்திரை நடிகை காயத்திரி யுவராஜ்.! எளிமையாக நடந்த வளைகாப்பு.!

நடிகை காயத்ரி யுவராஜ் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் செய்தியை தனது ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு தற்போது வீட்டிலேயே வைத்து ஐந்தாவது மாத வளைகாப்பு நடத்தப்பட்டிருக்கிறது. அந்த வீடியோக்களை அவர் தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் பல நாடகங்களில் நடித்ததன் மூலமாக புகழ்பெற்றவர் நடிகை காயத்ரி. இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தார். தென்றல் என்னும் சீரியல் மூலமாக தன்னுடைய சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்னர் ஜோடி நம்பர் ஒன் சீசன் ஒன்பதில் இவர் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். பின்னர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் கில்லாடி என்கிற நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். தென்றல் நாடகத்திற்கு பிறகு இவர் பிரியசகி, அழகி, சரவணன் மீனாட்சி, பொன்னூஞ்சல், சித்தி பாகம் 2, மோகினி, களத்து வீடு, மெல்ல திறந்தது கதவு, அரண்மனைக்கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற பல நாடகங்களில் நடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கர்ப்பமாக இருப்பதை அறிவித்த சின்னத்திரை நடிகை காயத்திரி யுவராஜ்.! எளிமையாக நடந்த வளைகாப்பு.! 1

விளம்பரம்

இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு சீரியல் என்று சொன்னால் அது சரவணன் மீனாட்சி தான். இந்த சீரியலுக்கு பின்னர் பெரிதும் அறியப்பட்ட நடிகையாக இவர் மாறிப் போனார். தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க என்கிற சீரியலில் யமுனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் தற்போது இவருக்கு திருமணம் ஆன காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இது மட்டுமல்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்கிற நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்து கொண்டு தனது பங்களிப்பை கொடுத்திருந்தார் காயத்ரி. இவர் பிரபல டான்ஸ் மாஸ்டர் யுவராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் காயத்ரி.

தொடர்புடையவை  இந்த கொலை மிரட்டலுக்கு எல்லாம் பயந்தவள் நான் இல்ல.! ஆவேசமான வனிதா விஜயகுமார்.!

கர்ப்பமாக இருப்பதை அறிவித்த சின்னத்திரை நடிகை காயத்திரி யுவராஜ்.! எளிமையாக நடந்த வளைகாப்பு.! 3

விளம்பரம்

சில நாட்களுக்கு முன்பு காயத்ரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அதில் அவர் கர்ப்பமாக இருப்பது போலவும் வயிறு பெரிதாக இருப்பது போலவும் இருந்தது. இது குறித்து ரசிகர்கள் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் இத்தனை காலம் மௌனம் காத்து வந்த அவர், தற்போது தான் இரண்டாவதாக கர்ப்பமாக இருக்கும் செய்தியை பகிர்ந்து இருக்கிறார். மேலும் வீட்டிலேயே வைத்து எளிமையாக அவருக்கு வளைகாப்பையும் அவரது கணவர் நடத்தி இருக்கிறார். அந்த வீடியோக்களையும் அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Gayathiri from Aminjikarai

விளம்பரம்

Leave a Comment