குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் இந்த வாரம் செமி ஃபைனல்ஸ் நடக்க இருக்கிறது. ஏற்கனவே விசித்ரா முதல் ஃபைனலிஸ்டாக தேர்வாகி இருக்கும் நிலையில், தற்போது மீதம் இருக்கும் நான்கு போட்டியாளர்களில் யார் இரண்டாவது பைனலிஸ்ட் என்பதை முடிவு செய்யும் போட்டியாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக நடுவர்கள் தற்போது பல கடினமான உணவுகளை சமைக்குமாறு குக்குகளை அறிவுறுத்தி இருக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரை உலகில் டாப் ஹிட் ரியாலிட்டி ஷோவாக இருந்து வருகிறது. உலகின் தமிழ் பேசும் மக்கள் எந்த மூலையில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பார்க்க தவறுவதில்லை. பலரின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக இருக்கும் இது, மூன்று சீசன்களை முடித்து தற்போது நான்காவது சீசனை நடத்தி வருகிறது. இந்த சீசனும் விரைவில் முடிவடையே இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் பத்து குக்குகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, தற்போது ஐந்து பேராக சுருங்கி இருக்கிறது. இடையில் இரண்டு வைல்டு கார்டு என்ட்ரி போட்டியாளர்கள் வந்த நிலையில் அதில் ஒருவர் மட்டுமே எலிமினேட் செய்யப்பட்டு தற்போது ஐந்து குக்குகள் இறுதிச்சுற்றுக்கு தகுதியாகி இருக்கின்றனர். கடந்த வாரம் நடந்த பிக் பாஸ் வெர்சஸ் குக் வித் கோமாளி போட்டியில் மிக நன்றாக உணவை சமைத்து விசித்ரா முதல் பைனல்லிஸ்ட்டாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். தொடர்ந்து சிருஷ்டி, சிவாங்கி, மைம் கோபி, கிரண் என நான்கு பேர் மட்டுமே மீதம் இருந்த நிலையில் தற்போது அந்த நான்கு பேருக்கும் செமி பைனல்ஸ் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த செமி பைனல்ஸ்க்காக சில கடுமையான போட்டிகள் வைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சுண்டைக்காய், கல்லீரல், கூனைப்பூ மீன் முட்டை, தேயிலை உள்ளிட்ட வித்தியாசமான உணவுகளை கொடுத்து குக்குகளை சமைக்க நடுவர் தாமு அறிவுறுத்துகிறார். இதை பார்த்த குக்குகள் பலரும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர்.

இதனால் இந்த போட்டியில் மிக கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரண்டாவது பைனலிலிஸ்ட்டாக யார் உள்ளே செல்ல இருக்கிறார்கள் என்று எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television