பாவனிக்கு திடீரென நடந்த அறுவை சிகிச்சை.! ஐயோ அவருக்கு இப்படி ஒரு பிரச்சினையா?

சின்னத்திரை நடிகை பாவனி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று இருப்பதாகவும் மருத்துவமனையில் இருந்து சில புகைப்படங்களை பகிர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருக்கிறார். அவருக்கு தற்போது பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி என்கிற நாடகத்தின் மூலமாக சின்னத்திரை சீரியலில் நடிகையாக அறிமுகமானவர் பாவனி ரெட்டி. ஆரம்பத்தில் தெலுங்கு மற்றும் ஹிந்தி துறையில் இயங்கி வந்த அவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி நாடகம் திருப்புமுனையாக அமைந்தது.

பாவனிக்கு திடீரென நடந்த அறுவை சிகிச்சை.! ஐயோ அவருக்கு இப்படி ஒரு பிரச்சினையா? 1

விளம்பரம்

பின்பு அவருக்கு நடிகர் பிரஜினுடன் இணைந்து சின்னத்தம்பி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலுக்குப் பிறகு பிரபலமானார் பாவனி. பின்னர் இவர் பிக்பாஸ் சீசன் 5வில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் சில நாட்களிலேயே இறந்துவிட்ட நிலையில் தனியாக வாழ்ந்து வந்த அவருக்கு அதே பிக்பாஸில் மற்றொரு போட்டியாளராக கலந்து கொண்ட அமீருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் என்னும் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, அமீரின் காதலை பாவனி ஏற்றுக்கொண்டார். அந்த பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் முதலிடத்தையும் பிடித்திருந்தனர்.

தொடர்புடையவை  மைனாவுக்கு ப்ரபோஸ் செய்த ஜிபி முத்து.! பங்கமாக கலாய்த்து விட்ட விக்ரமன்.! செம்ம டைம்மிங் விக்கு.!

பாவனிக்கு திடீரென நடந்த அறுவை சிகிச்சை.! ஐயோ அவருக்கு இப்படி ஒரு பிரச்சினையா? 3

விளம்பரம்

இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் இருவரும் லிவ்விங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான துணிவு படத்தில் அமீர் மற்றும் பாவனி இருவரும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த நிலையில் பாவனி தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் தனக்கு அறுவை சிகிச்சை நடந்திருப்பதாக கூறி புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் எனது வாழ்க்கையின் இந்த 15 நாட்களை கழிப்பது மிகவும் கடினமாக இருந்தது. சிறு வலியுடன் தொடங்கிய இந்த பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரிக்க ஆரம்பித்தது. நான் எனது எலும்பியல் நிபுணரிடம் ஆலோசித்தேன். பின்னர் பிசியோதெரபி செய்யத் தொடங்கினேன். ஆனால் வலி தாங்க முடியாமல் போனது.

பாவனிக்கு திடீரென நடந்த அறுவை சிகிச்சை.! ஐயோ அவருக்கு இப்படி ஒரு பிரச்சினையா? 5

விளம்பரம்

பல தூக்கம் இல்லாத இரவுகளை கழித்த நான், வலியால் அழ ஆரம்பித்தேன். எனக்கு படப்பிடிப்புகள் கூட இருந்தன. ஆனால் எனக்கு ஓய்வு எடுக்க விருப்பமில்லை. இந்த வலியை தாங்கிக் கொண்டு ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அங்கு இருந்தவர்கள் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தனர், நான் வீட்டில் இருப்பது போல் என்னை உணர வைத்தனர், இப்படியாக எனது படப்பிடிப்பை முடித்தேன். தினமும் பிசியோதெரபியை தொடர்ந்து செய்து வந்தேன். ஆனாலும் வலி மோசமாகிவிட்டது .எனது வலது கையை என்னால் உயர்த்தக்கூட முடியவில்லை. கை உடைந்தது போல உணர்ந்தேன் அதிகாலையில் எழுந்து தயாராவது எனக்கு மிகப் பெரிய பணியாக இருந்தது.

தொடர்புடையவை  காவ்யாவுக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கும் பிரச்சனையா? விலகலுக்கு இதான் காரணமா?

பாவனிக்கு திடீரென நடந்த அறுவை சிகிச்சை.! ஐயோ அவருக்கு இப்படி ஒரு பிரச்சினையா? 7

விளம்பரம்

வலியால் நான் தினமும் கத்துவேன். இறுதியாக மருத்துவரை அணுகிய போது அவர்கள் இந்த எண்டோஸ்கோப்பிக் டிஸ்கெக்டமி அறுவை சிகிச்சையை எனக்கு செய்திருக்கிறார்கள். தற்போது சிகிச்சை முடிந்து நன்றாக உணர்கிறேன். வலியிலிருந்து மீண்டு வருகிறேன், இன்று டிஸ்ஜார்ஜ் செய்யப்படுவேன். இதனால் நான் மட்டுமல்ல எனது குடும்பத்தினர் நண்பர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

பாவனிக்கு திடீரென நடந்த அறுவை சிகிச்சை.! ஐயோ அவருக்கு இப்படி ஒரு பிரச்சினையா? 9

விளம்பரம்

அமீருக்கு நன்றி, எனக்குத் தெரியும் உங்கள் தூக்கத்தையும் வேலையும் நான் கெடுத்து விட்டேன் என்று. நான் வலியில் இருந்த போது குழந்தை போல் மாறினேன், எப்போதும் எனக்கு என்னுடன் இருப்பதற்காக நன்றி. எனது குடும்பத்தினருக்கும் நன்றி, லவ் யூ ஆல் மிஸ் யூ ஆல் என்று பதிவிட்டு இருக்கிறார். பலரும் பாவனியின் இந்த பதிவிற்கு ஆறுதலை கூறி வருகின்றனர். விரைவில் குணமாகி பாவனி இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று தங்களது வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Pavni (@pavani9_reddy)

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment