சொந்தமாக வீடு கட்டி கிரஹபிரவேசம் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா.! இதோ வீடியோ.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா ராஜ்குமார் தற்போது சொந்தமாக வீடு ஒன்றைக் கட்டி கிரகப்பிரவேசம் செய்திருக்கிறார். தற்போது தனது வீட்டை முழுவதுமாக சுற்றி காண்பித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்கிற நாடகத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் ஹேமா ராஜ்குமார். மயிலாடுதுறையில் பிறந்து வளர்ந்த இவர் நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு வந்து நடிக்கத் தொடங்கினார். பாயும் புலி, ஆறாது சினம், சவரக்கத்தி, வீரையன், இவன் யாரென்று தெரிகிறதா போன்ற பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்ன தம்பி, களத்து வீடு, ஆபீஸ் போன்ற பல நாடகங்களில் நடித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சொந்தமாக வீடு கட்டி கிரஹபிரவேசம் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா.! இதோ வீடியோ.! 1

விளம்பரம்

இது மட்டுமல்லாமல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குலதெய்வம், விதி, தென்றல், பொன்னூஞ்சல் போன்ற நாடகங்களிலும், ஜீ தமிழில் ஒளிபரப்பான மெல்ல திறந்தது கதவு போன்ற நாடகங்களிலும் நடித்து பிரபலமானார். ஆனால் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு நாடகம் என்று சொன்னால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். இந்தத் தொடரில் அவர் மீனா என்கிற கதாபாத்திரத்தில் இரண்டாவது மருமகளாக நடித்து பலரின் உள்ளங்களை கொள்ளை கொண்டிருக்கிறார். குடும்பத்தில் என்ன சண்டை சச்சரவு வந்தாலும் அதையெல்லாம் தாங்கிக் கொண்டு குடும்பத்தின் ஒற்றுமைக்காக போராடும் ஒரு மருமகளாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். கணவன் வீட்டையும் விட்டுக் கொடுக்காமல், தனது தந்தையையும் விட முடியாமல் இரண்டுக்கும் இடையே இருந்து இவர் படாத பாடுபடும் கதாபாத்திரமாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருவதால் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.

தொடர்புடையவை  பொன்னியின் செல்வன் நந்தினியாக மாறிய மஹாலட்சுமி.! யப்பா என்னா அழகு.!

சொந்தமாக வீடு கட்டி கிரஹபிரவேசம் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா.! இதோ வீடியோ.! 3
இந்த நிலையில் ஹேமா தற்போது தான் சொந்தமாக கட்டி வரும் வீட்டில் பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் கிரகப்பிரவேசம் முடிந்துவிட்டது, ஆனால் எளிமையாக நடத்தப்பட்டதால் அதை வீடியோவாக எடுக்க முடியவில்லை என்று சொல்லி, கட்டி முடித்த தனது வீட்டின் உள் அமைப்பை தற்போது சுற்றிக் காண்பித்து புது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Hema’s diary

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment