தமிழும் சரஸ்வதியும் சீரியலின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் வசுந்தராவின் பிள்ளைக்கு பெயர் வைக்கும் நிகழ்வில் தமிழும் அவரது தாய் கோதையும் தற்காலிகமாக ஒன்றாக இணைந்து இருக்கின்றனர். விரைவில் இருவரும் நிரந்தரமாக ஒண்றிணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழும் சரஸ்வதியும் தொடரில் கோதை இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கும் நடேசன் கோதையின் இரு மகன்கள் தான் தமிழ் மற்றும் கார்த்திக். நடேசனுக்குப் பிறகு தமிழும் கார்த்திக்கும் இணைந்து இந்த நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கோதையின் குடும்பத்தை கெடுக்கும் நோக்கில், அர்ஜீன் தமிழின் தங்கையை திருமணம் செய்து கொண்டு தமிழின் வீட்டிற்குள் நுழைந்தார். பின்னர் சதி செய்து மூத்த மகன் தமிழை அவரது தாய் கோதை கையாலேயே வீட்டிலிருந்து அடித்து துரத்தும்படி செய்துவிட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்து வெளியேறிய தமிழ் மிகவும் கஷ்ப்படுகிறார். குடும்பத்தின் பாரத்தை குறைக்க சரஸ்வதியும் மெக்கானிக் கடையில் வேலை பார்க்கிறார். பின்னர் கோதை இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் சேர்மனுக்கான தேர்தல் நடைபெறுகிறது. அதில் தமிழும் கோதையும் நேருக்கு நேர் மோதினர். அந்த தேர்தலில் தமிழ் 148 வாக்குகளும், கோதை 102 வாக்குகளும் வாங்கி தோல்வியைத் தழுவினார். இது கோதைக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியது. இதனால் நாளுக்கு நாள் கோதைக்கும், தமிழுக்கும் இடையே விரிசல் அதிகமானது. பின்னர் அர்ஜீன் தன்னுடைய கம்பெனியின் பெயரை கெடுக்க நினைப்பதை கோதை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்கிறார். மேலும் தனது மகன் தமிழ் மீதும் அவருக்கு பாசம் வருகிறது. இதற்கிடையில் வசுந்தராவுக்கு பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்வு நடைபெற்று இருக்கிறது. அதில் தமிழ், சரஸ்வதி, கோதை என ஒட்டு மொத்த குடும்பமும் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது தமிழும் கோதையும் அருகருகே அமர்ந்து சாப்பிக் கொண்டிருக்க தமிழுக்கு புரை ஏறுகிறது. அப்போது தன்னை அறியாமல் தமிழின் தலையை தட்டிக் கொடுக்க வருகிறார் கோதை. அதன் பின்னர் தமிழுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கிறார். அதன் பின்னர் கோதை தடுமாறி விழ அவரை தாங்கிப் பிடிக்கிறார். இதனால் விரைவில் இருவரும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது போல் தன் மகனுக்கு ஏதாவது என்றால் தாய் துடிப்பதும், தாய்க்கு ஒன்று என்றால் மகன் துடிப்பதும் பார்ப்பதற்கு நெகிழ்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை காண..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television