லஞ்சத்துறையிடம் வசமாக சிக்கிக்கொண்ட கண்ணன்.! தரதரவென இழுத்துச் சென்ற அதிகாரிகள்.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் கண்ணனை தற்போது விஜிலன்ஸ் அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் சென்று இருக்கின்றனர். இந்த செய்தியை பார்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் தற்போது அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர் தற்போது அடுத்த விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. மூர்த்தி தனம், ஜீவா மீனா, கதிர் முல்லை, கண்ணன் ஐஸ்வர்யா என்று நான்கு அண்ணன் தம்பிகள் மற்றும் அவர்களின் மனைவிகள் குறித்த கதையாக இந்த கதை இருந்து வருகிறது. தற்போது இந்த கதையின்படி குடும்பத்தில் பல விரிசல்கள் ஏற்பட்டு ஒவ்வொன்றாக சரியாகி வருகிறது. பிரிந்து சென்ற கண்ணன் ஐஸ்வர்யா மீண்டும் மூத்த அண்ணன் மூர்த்தியிடம் வந்து இணைந்து இருக்கின்றனர். ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

லஞ்சத்துறையிடம் வசமாக சிக்கிக்கொண்ட கண்ணன்.! தரதரவென இழுத்துச் சென்ற அதிகாரிகள்.! 1

விளம்பரம்

ஆனால் பிரிந்து சென்ற மற்றொரு தம்பியான ஜீவா மற்றும் மீனா இருவரும் இன்னும் இந்த குடும்பத்தில் வந்து இணையவில்லை. இந்த நிலையில் கதைப்படி மூன்றாவது மருமகளாக இருக்கும் முல்லைக்கு குழந்தை பிறந்து இருக்கிறது. மூத்த மருமகள் தனம் மற்றும் கடைசி மருமகள் ஐஸ்வர்யா இருவரும் கர்ப்பமாக இருக்கின்றனர். தற்போது ஐஸ்வர்யாவிற்கு வளைகாப்பு நடத்தி முடித்து இருக்கின்றனர். மேலும் கதையில் திடீர் திருப்பமாக தனத்திற்கு மார்பக புற்றுநோய் இருப்பதாகவும், அவருக்கு குழந்தையை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்த பின்பு, தனத்திற்கு மார்பக அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்திருக்கின்றனர். இப்படி அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வரும் நிலையில் வங்கியில் வேலை பார்க்கும் கண்ணனை தற்போது லஞ்சத்துறை அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர். கண்ணன் லஞ்சம் வாங்கி இருப்பதாக மேலதிகாரியின் சூழ்ச்சியால் விஜிலன்ஸ் அதிகாரிகள் வங்கியை சோதனை இடுகின்றனர்.

தொடர்புடையவை  ரியோவுடன் மிக நெருக்கமாக குத்தாட்டம் போடும் ரம்யா பாண்டியன் | Ramya Pandiyan

லஞ்சத்துறையிடம் வசமாக சிக்கிக்கொண்ட கண்ணன்.! தரதரவென இழுத்துச் சென்ற அதிகாரிகள்.! 3
தற்போது கண்ணனின் மேஜையை சோதனை இடும்பொழுது, மேஜைக்குள் 500 ரூபாய் கட்டு பணம் இருப்பதை பார்க்கும் அதிகாரிகள் கண்ணனை கைது செய்து அழைத்து செல்கின்றனர். இந்த செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறது. இதை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் பார்த்து விடுகின்றனர். மேலும் கண்ணனின் மனைவியாக இருக்கும் ஐஸ்வர்யா இந்த செய்தியை பார்த்த பின்பு நிலைகுலைந்து போய் இருக்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment