மீண்டும் காமெடிக்கு திரும்பிய சந்தானம்.! வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் DD Returns படத்தின் ட்ரைலர் இதோ.!

நடிகர் சந்தானம் நடித்திருக்கும் டிடி ரிட்டன்ஸ் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. காமெடி கலந்த ஒரு திரில்லர் திரைப்படத்தில் சந்தானம் நடித்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா, சகலை வெர்சஸ் ரகளை போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது காமெடி திறமையை வெளி உலகத்திற்கு கொண்டு வந்தவர் நடிகர் சந்தானம். இவர் இதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு பேசாத கண்ணும் பேசுமே என்கிற படத்தின் மூலமாக சிறிய ரோலில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் விஜய், அஜித், ஜெயம் ரவி, வடிவேலு, சூர்யா, சிம்பு, தனுஷ் என பல முண்ணனி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார். உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து அவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது .அதன் பின்னர் பல படங்களில் காமெடியனாக வலம் வந்து கொண்டிருந்த சந்தானத்துக்கு ஹீரோவாக நடிக்கும் ஆசை வந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் காமெடிக்கு திரும்பிய சந்தானம்.! வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் DD Returns படத்தின் ட்ரைலர் இதோ.! 1

விளம்பரம்

காமெடி டிராக்கை கைவிட்டு ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார் சந்தானம். தில்லுக்கு துட்டு, இனிமே இப்படித்தான், ஏ1, பாரிஸ் ஜெயராஜ் போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் இரண்டு படங்கள் மட்டுமே வெளியானது குலுகுலு மற்றும் ஏஜென்ட் கண்ணாயிரம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் எதிர்பார்த்து அளவிற்கு வெற்றியை தரவில்லை. தொடர்ந்து தற்போது சந்தானம் மூன்று படங்களில் நடித்து வருகிறார் கிக், டிடி ரிட்டர்ன்ஸ், வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய மூன்று படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதில் டிடி ரிட்டன்ஸ் என்கிற படம் தற்போது முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. இந்த படத்தில் சந்தானம், நடிகை சுரபி, ரெடின் கிங்சிலி, மாறன், பிரதீப் ராபர்ட், மொட்ட ராஜேந்திரன் ,முனீஷ்காந்த், தீனா தங்கதுரை, தீபா போன்ற பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஆர் கே என்டர்டைன்மென்ட் சார்பில் சி ரமேஷ் குமார் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். எஸ் பிரேம் ஆனந்த் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

தொடர்புடையவை  ஏலியனுடன் சேர்ந்து கொண்டு செம்ம லூட்டி அடிக்கும் சிவகார்த்திகேயன்.! Second சிங்கிள் வீடியோ இதோ.!

மீண்டும் காமெடிக்கு திரும்பிய சந்தானம்.! வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் DD Returns படத்தின் ட்ரைலர் இதோ.! 3

விளம்பரம்

ஹாரர் கேம் போட்டியில் சந்தானம் மற்றும் அவரது நண்பர்கள் பங்கேற்கின்றனர். அப்போது சந்தானத்தின் கவுண்டர்களும் ஹாரர் காமெடிகளும் ட்ரைலர் முழுவதும் நிறைந்து இருக்கிறது. அதுபோன்ற ஒரு ட்ரெய்லரை தற்போது படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். இந்த படம் வருகிற ஜூலை 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ட்ரைலரை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Think Music India

விளம்பரம்

Leave a Comment