இது ஒரு உப்புமா கதை, 2-வது பாதிக்கு கதையே இல்ல.! மாவீரன் படம் பற்றி BlueSattai மாறன் விமர்சனம்.!

நேற்று தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியான மாவீரன் திரைப்படம் குறித்து தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். வழக்கம் போல படம் குறித்து காட்டமான சில விமர்சனங்களையும் அவர் முன் வைத்திருக்கிறார். மண்டேலா படத்தின் மூலமாக தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் மடோன் அஸ்வின் தற்போது சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் ஆகியோரை வைத்து இயக்கியிருக்கும் படம் தான் மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கம் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்த்து அதிகமாக இருந்தது. மேலும் மிஷ்கின், சரிதா, யோகி பாபு உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்ததால் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்தது. ஆனால் படம் நேற்று வெளியான பின்பு அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதுதான் ரசிகர்கள் பெரும்பாலானோரின் கருத்தாக இருந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இது ஒரு உப்புமா கதை, 2-வது பாதிக்கு கதையே இல்ல.! மாவீரன் படம் பற்றி BlueSattai மாறன் விமர்சனம்.! 1

விளம்பரம்

குடிசை பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை குடிசை மாற்று வாரியமான அடுக்குமாடி குடியிருப்பதற்கு மாற்றுகின்றனர். அப்போது அங்கு சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. அந்த பிரச்சனைகளை தீர்க்கவோ, தட்டி கேட்கவோ ஹீரோ பயந்து கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு காதில் அசிரீரி போல் கேட்கிறது. அதன்பின்னர் அவருக்கு ஒரு அமானுஷ்ய சக்தி கிடைக்கிறது. அந்த சக்தி கிடைத்த பின்னர் என்ன நடந்தது? என்பது குறித்த படமாகத்தான் இந்த படம் இருந்தது. இந்த படம் குறித்து விமர்சனம் செய்திருக்கும் ப்ளூ சட்டை மாறன் முதல் பாகம் நன்றாக இருந்ததாகவும், ஃபேண்டஸி கதையை மையமாகக் கொண்டு முதல் பாகம் விறுவிறுப்பாக நகர்ந்ததாகவும், ஆனால் இரண்டாம் பாகம் வழக்கம் போல ஒரு ஹீரோ வில்லன் கதையாக தான் இருந்ததாகவும், வேறு எந்த மாற்றமும் இல்லாமல் படம் ஓடிக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

தொடர்புடையவை  ஏன்டா இப்படி கீழ்தரமா பண்றீங்க? நடிகர் சங்கம் மீது கடும் கோபத்தில் சாந்தனு?

இது ஒரு உப்புமா கதை, 2-வது பாதிக்கு கதையே இல்ல.! மாவீரன் படம் பற்றி BlueSattai மாறன் விமர்சனம்.! 3

விளம்பரம்

இந்த இடத்தில் இந்த சீன் முடியும் என்று எதிர்பார்க்கும் நேரத்தில் மீண்டும் வழவழவென இழுத்துக் கொண்டிருந்ததாகவும் ப்ளூ சட்டை கூறினார். மேலும் வழக்கமான ஒரு உப்புமா கதையாக தான் இந்த படம் இருந்தது. இந்த படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை, மேலும் படம் முடியும்பொழுது இந்த படம் இரண்டாம் பாகத்திற்கான ஒரு லீட் கொடுத்து முடித்திருந்தனர். இன்னும் சில நாட்கள் கழித்து படத்தின் சக்சஸ் மீட் என்று ஒன்று வைப்பார்கள். அப்போது இரண்டாம் பாகம் குறித்து கேட்டால் கிரிஞ்சாக ஏதாவது பதில் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஏற்கனவே இயக்குனருக்கும் நடிகருக்கும் இடையே கிழிந்த சட்டைகள் பல இருக்கிறது என்று தனது விமர்சனங்களையும் முன் வைத்தார். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Tamil Talkies

விளம்பரம்

Leave a Comment