இன்று காலை முதலே பிக்பாஸ் விக்ரமன் குறித்த சர்ச்சைகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது விக்ரமனுக்கு எதிரணியில் இருக்கும் அசீம், புதிய பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார். அவர் பொதுவாக அந்த பதிவை போட விக்ரமன் குறித்துதான் அசீம் இவ்வாறு கூறியிருப்பதாக தற்போது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். பிக்பாஸில் கலந்து கொண்ட இரு போட்டியாளர்கள்தான் விக்ரமன் மற்றும் அசீம். பிக்பாஸில் இருந்த போது இவர்கள் இருவருக்குள்ளும் ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே இருந்தது. அசீம் மற்ற போட்டியாளர்களை தரக்குறைவாக பேச அதனை தட்டிக் கேட்கிறேன் என்று விக்ரமன் மல்லுக்கட்ட இருவருக்கிடையிலும் சண்டை தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் விக்ரமன் தான் டைட்டிலை ஜெயிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் டைட்டிலை அசால்ட்டாக அள்ளித் தூக்கிக் கொண்டு போயிருந்தார் அசீம். இது இணையத்தில் பல விமர்சனங்களை ஏற்படுத்தியது.

தான் பிக்பாஸ் பணத்தை ஜெயித்தால் அந்த பணத்தில் பாதியை கொரோனாவால் பெற்றோர்களை இழந்த மாணவர்களின் படிப்பு செலவிற்கு அளிப்பேன் என்று உறுதி அளித்திருந்தார் அசீம். அந்த வகையில் சொன்ன சொல்லை நிறைவேற்றிக் காட்டும் வண்ணம் அவ்வாறே செய்தும் காட்டியிருக்கிறார். இந்த நிலையில் விக்ரமன் பற்றி எதுவும் பெரிய அளவில் செய்திகள் வெளியாகாமல் இருந்து வந்தது. இன்று காலை விக்ரமனின் முன்னாள் காதலியும் வழக்கறிஞருமான கிருபா என்ற பெண் தான் விக்ரமனின் முன்னாள் காதலி எனக் கூறிக்கொண்டு விக்ரமன் குறித்து சில வாட்சப் ஆதாரங்களை பதிவிட்டு இருந்தார். தன்னை காதலித்து விட்டு ஏமாற்றியதாகவும், தன்னிடமிருந்து பணம், பொருள் என வாங்கிக் கொண்டதாகவும், அதை திருப்பி கேட்ட பொழுது தன்னிடம் சண்டை பிடித்ததாகவும் தன்னை ஏமாற்றியதாகவும் கூறியிருந்தார். மேலும் மேனேஜர் என்று சொல்லிக்கொண்டு அந்த பெண்ணுடனும் விக்ரமன் தொடர்பில் இருந்தார் என்றும் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.
இது மட்டுமல்லாமல் விக்ரமன் அவர் சார்ந்திருக்கும் கட்சி குறித்தும், தலைவர் குறித்தும் பேசிய விஷயங்களை எல்லாம் பொது வெளியில் போட்டு உடைத்து இருந்தார் கிருபா. இந்த பிரச்சனை பூதாகரமாகி கொண்டிருக்கும் நிலையில் விக்ரமன் தரப்பில் இருந்து எந்த விதமான விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கு இடையில் அசீம் கைதட்டுவது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, “நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி றஎரிய உனைக்கேட்கும், நீ விதைத்த விதை எல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்” (என் தத்துவம் ரீச் ஆகும், என்ன கொஞ்சம் லேட் ஆகும்) என்று பதிவிட்டு இருக்கிறார். இது விக்ரமனை தான் குறிப்பிட்டு இருக்கிறார் என்றும், அறம் வெல்லும் கேங் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்? என்றும், வேற லெவல் டைமிங் என்றும் ரசிகர்கள் அசீமுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்..!
View this post on Instagram