மாற்றுத் திறனாளி மாணவிக்காக சூர்யா செய்த நெகிழ்ச்சி செயல்.! குவியும் பாராட்டுக்கள்.!

இன்று அகரம் அறக்கட்டளை சார்பில் உதவி விழா நடத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 25 மாணவர்களுக்கு உதவி தொகையை வழங்கி இந்த விழாவை சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் சிறப்பித்து இருக்கின்றனர். அந்த வீடியோக்கள் காலையிலிருந்து வைரலாகி வந்த நிலையில் தற்போது ஒரு புதிய வீடியோ ஒன்று வைரலாகத் தொடங்கி இருக்கிறது. மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவருக்காக சூர்யா செய்த அந்த நெகிழ்ச்சி செயல் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. தமிழ் திரையுலகில் கலைக் குடும்பமாக விளங்கிக் கொண்டிருக்கிறது சூர்யாவின் குடும்பம். சூர்யாவின் தந்தை சிவக்குமார், சூர்யா, அவரது தம்பி கார்த்திக், சூர்யாவின் மனைவி ஜோதிகா என அனைவரும் திரைத் துறையைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். சூர்யாவின் தங்கையும் ஒரு பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளி மாணவிக்காக சூர்யா செய்த நெகிழ்ச்சி செயல்.! குவியும் பாராட்டுக்கள்.! 1

விளம்பரம்

தனது திரைப் பணிகளுக்கு மத்தியில் அவ்வப்போது இதுபோன்ற நலத்திட்டங்களையும் செய்து வருகின்றனர் சூர்யாவின் குடும்பம். அகரம் என்கிற ஒரு அறக்கட்டளையை தொடங்கி பள்ளி முதல் கல்லூரி வரை பலரின் கல்விச் செவை ஏற்றிருக்கிறது. அகரம் அறக்கட்டளை பலரை படிக்க வைத்திருக்கும் ஒரு அறக்கட்டளையாகும். இந்த நிலையில் இன்று ஒரு விழாவை நடத்தி இருக்கின்றனர். அதில் சுமார் 25 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி கல்விச் செலவையும் ஏற்று இருக்கிறது. அந்த வீடியோக்கள் காலையிலிருந்து வைரலாகி வந்த நிலையில் தற்போது ஒரு புதிய வீடியோ ஒன்றை வெளியாகி இருக்கிறது. அதில் பார்வை இல்லாத மாணவி ஒருவர் நடந்து வரும் பொழுது அங்கு அவருக்கு தடையாக இருந்த வாட்டர் பாட்டில்களை எல்லாம் சூர்யா எடுத்து ஓரமாக வைக்கிறார். பின்னர் அந்த மாணவி தனக்கு அருகில் நின்று கொண்டிருப்பதை கவனித்த சூர்யா சட்டென எழுந்து நின்றார்.

விளம்பரம்

பிறகு அந்த மாணவியை “நீ இந்த இருக்கையில் உட்காருமா” என்று சொல்லி அந்த மாணவியை தனது சீட்டில் அமர வைத்துவிட்டு அவர் பின்னால் சென்று நின்று கொண்டிருந்தார். இந்த காட்சியை பார்த்த பலரும் சூர்யாவின் இந்த செயலை வெகுவாக பாராட்டி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video.! 

 

விளம்பரம்
தொடர்புடையவை  "அடி ஏழேழு ஜென்மம் ஆனாலும் நீயில்லாமல் நானில்லையே"!! சூர்ய உதயத்துடன் ஹனிமூனை கொண்டாடும் நயன் விக்கி!! வைரல் வீடியோ

Youtube Video Embed Code Credits: News Tamil 24×7

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment