கணவரை விவாகரத்து செய்யும் பிரபல ஹிந்தி நடிகை..! பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

திரை உலகைச் சுற்றி சமீப காலமாக விவாகரத்து புயல் அவ்வப்போது எழுந்து கொண்டு ஓய்ந்து கொண்டே தான் இருந்து வருகிறது. சில செய்திகள் சில சமயங்களில் உண்மையாகவும் மாறியிருக்கிறது. சின்னத்திரை, வெள்ளித்திரை, பாலிவுட், கோலிவுட் டோலிவுட் என்று தொடர்ந்து விவாகரத்து சர்ச்சைகள் திரைப் பிரபலங்களை சுற்றி சுழன்று அடித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் திரையுலகில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா சமீபத்தில் தங்களது பிரிவை அறிவித்திருந்தனர். இருவரும் விவாகரத்து செய்யாமலேயே தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். வெள்ளித்திரையில் தான் இப்படி என்றால் சின்ன திரையிலும் அடிக்கடி விவாகரத்து செய்திகள் நடந்து வருகிறது. விஜய் டிவி நடிகர்கள் சம்யுக்தா விஷ்ணுகாந்த் திருமணமான 3 மாதங்களில் பிரிவதாக அறிவித்திருந்தனர். பின்னர் இறுதியாக பவன் கல்யாண் தனது மூன்றாவது மனைவியை பிரிவதாக செய்திகள் வெளியான நிலையில் அந்த செய்தியை அவர் மறுத்து இருந்தார்.

கணவரை விவாகரத்து செய்யும் பிரபல ஹிந்தி நடிகை..! பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.! 1
இந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன் தனது கணவர் ரன்வீர் சிங்கை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. சில நாட்களாகவே தீபிகா படுகோனும் ரன்வீர் சிங்கும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும், விரைவில் விவாகரத்து பெற இருப்பதாகவும் பிரபல திரை விமர்சகரும் சென்சார் போர்டு உறுப்பினருமான உமர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பிரபல திரை விமர்சகரும் சென்சார் போர்டு உறுப்பினருமாக இருக்கும் உமர் சந்து அடிக்கடி திரை பிரபலங்களின் விவாகரத்து குறித்த தகவல்களை பகிர்ந்து வருகிறார். ஏற்கனவே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார். அவரின் கூற்றுப்படியே அவர்கள் இருவரும் தனியாக வாழ்ந்து வரும் நிலையில் தற்போது அவர் அடுத்த அதிர்ச்சியாக இந்த தகவலை கூறியிருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  'லால் சலாம்' படம் எப்படி இருக்கிறது? படம் நல்லா இருக்கா? இல்லையா? பொதுமக்கள் கூறிய கருத்து என்ன?

கணவரை விவாகரத்து செய்யும் பிரபல ஹிந்தி நடிகை..! பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.! 3

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தீபிகா படுகோனும் ரன்வீர் சிங்கும் ஒருவரை ஒருவர் பிரிந்துவிட்டனர். விவாகரத்துக்கு முன்னே இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். நான் கடந்த வருடமே இது குறித்து பேசி இருந்தேன். பாருங்கள் அதுவே நடந்திருக்கிறது என்று பதிவிட்டு இருக்கிறார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் பெரும் வைரலாக இருக்கிறது. தொடர்ந்து விவாகரத்து குறித்தும், நடிகர்கள் விவாகரத்து செய்வது குறித்தும் பேசி வரும் உமர் சந்து தற்போது இந்த தகவலை கூறி இருப்பது பாலிவுட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..!

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment