மும்பை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் சூர்யா தனது மகனை போட்டோ எடுக்கக்கூடாது என்று பத்திரிகையாளர்களுக்கு கட்டளை இடுகிறார். அதற்கு சரி என்று சொல்லும் பத்திரிகையாளர்கள் சூர்யாவின் மகன் தேவ்வை போட்டோ எடுக்காமல் சூர்யாவை மட்டும் போட்டோ எடுத்தனர். அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. இவருக்கு நடிகை ஜோதிகாவுடன் திருமணம் ஆகி தியா மற்றும் தேவ் என்கிற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த நிலையில் சமீப காலமாக சூர்யா மற்றும் ஜோதிகா தனது குழந்தைகளுடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதை மெய்ப்பிக்கும் வகையில் இன்று சூர்யா மும்பை விமான நிலையத்திற்கு வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்று அகரம் சார்பில் நடந்த விழாவில் கலந்து கொண்டார் சூர்யா. இந்த விழாவில் அவரது தம்பி கார்த்திக் மற்றும் தந்தை சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசியிருந்தனர். இந்த விழாவில் சுமார் 25 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கி சிறப்பித்திருந்தனர் அகரம் அறக்கட்டளையினர். இந்த விழா முடிந்து தற்போது மீண்டும் மும்பைக்கு திரும்பிய சூர்யா இன்று சென்னையிலிருந்து விமான மூலமாக மும்பை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவருடன் அவரது மகன் தேவும் வந்தார். அப்போது காரை விட்டு இறங்கிய சூர்யாவை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொள்ள, தனது மகனை போட்டோ எடுக்கக்கூடாது தன்னை மட்டும் போட்டோ எடுக்குமாறு கட்டளையிட்டார். சரி என்று கூறிய பத்திரிக்கையாளர்கள் சூர்யாவை மட்டும் போட்டோ எடுத்து விட்டு தேவ்வை போட்டோ எடுக்காமல் விட்டுவிட்டனர்.

இதே போல சம்பவம் ஏற்கனவே மும்பையில் ஒரு முறை நடைபெற்றது. சூர்யா, ஜோதிகா, மகள் தியா மற்றும் தேவ் ஆகிய அனைவரும் ஒரு ஹோட்டலில் இருந்து வெளியே வரும்போது பத்திரிக்கையாளர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுக்க முயற்சித்தனர்.அப்போது சூர்யாவும் ஜோதிகாவும் கையால் கேமராவை மறைத்து தங்கள் குழந்தைகளை விட்டு விடுங்கள், அவர்களுக்கு பிரைவேசி வேண்டும், எங்களை எவ்வளவு வேண்டுமானாலும் போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்றனர். தற்போது அதேபோன்ற சம்பவம் மீண்டும் நடந்திருப்பது இணையத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O