பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இனியா தற்போது அறநூறுக்கு 596 மார்க் எடுத்து பள்ளியிலேயே முதல் மாணவியாக வந்திருக்கிறார். அவருக்கு பாராட்டு விழா ஒன்றை நடத்துவதற்காக பள்ளியில் இருந்து தற்போது அழைப்பு வந்திருக்கிறது. இனியாவை பெற்றோர்களை அழைத்துக்கொண்டு வருமாறு பள்ளியிலிருந்து போன் வரவே சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறார். அந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. பாக்கியலட்சுமி தொடரில் தற்போது பல பிரச்சினைகள் நடந்து முடிந்திருக்கிறது. கோபியின் மனைவியாக இருக்கும் பாக்யா தற்போது போராடி தனது கணவரிடம் இருந்து அந்த வீட்டை எழுதி வாங்கி இருக்கிறார். கோபிக்கு சேர வேண்டிய 40 லட்ச ரூபாய் பணத்தை அவரது முகத்தில் வீசி எறிந்து இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோபி மற்றும் பாக்யாவின் கடைசி மகளாக இருக்கும் இனியா இந்த பிரச்சனைகளுக்கு நடுவில் நன்றாக படித்திருக்கிறார். அவர் பரிட்சையை மிக நன்றாக எழுதியிருக்கிறார். 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி இருக்கும் அவருக்கு தற்போது ரிசல்ட் வந்திருக்கிறது. அதில் 600 க்கு 596 மதிப்பெண்கள் பெற்று அவர் பள்ளியிலேயே முதல் மாணவியாக வந்திருக்கிறார். இந்த செய்தியை எழில் மொபைலில் பார்த்து கூறிக் கொண்டிருக்க மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார் இனியா. அப்போது அவருக்கு பள்ளியிலிருந்து கால் வருகிறது. அதை எடுத்துப் பேசும்பொழுது நீங்கள் பள்ளியிலேயே முதல் மாணவியாக வந்திருக்கிறாய், உங்கள் பெற்றோர்களை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு வரவும் என்று கூறுகிறார்கள். ஆனால் பாக்யாவோ வீட்டில் இல்லாமல் சமையல் ஆர்டர் செய்வதற்காக சற்று தள்ளி சென்றிருக்கிறார். அவருக்கு அங்கு மொபைலில் டவரும் கிடைக்கவில்லை. இதனால் இனியாவிற்கு ஃபோன் செய்ய முடியவில்லை.

இனியாவும் பாக்யா வருவாரா? என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் பாக்யாவோ தொலைவில் சமையல் ஆர்டரை சமைப்பதற்காக சென்றிருக்கிறார். மொபைலில் டவர் கிடைக்காமலும் போன் செய்ய முடியாமலும் அங்கு தவித்துக் கொண்டிருக்கிறார் பாக்யா. அந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. பாக்யா வராமல் கோபி மற்றும் ராதிகா இருவரும் இனியாவின் அப்பா அம்மா என்று சொல்லிக்கொண்டு பள்ளிக்கு செல்வார்களா என்பது தெரியவில்லை. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television