விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் கிராமத்திற்கு செல்லும் சூர்யா மற்றும் வெண்ணிலா இருவரும் தண்ணீர் என நினைத்து சாராயத்தை குடித்து காரிலேயே மட்டையாகி விடுகின்றனர். அந்த காமெடியான ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியல் சற்று வித்தியாசமான கதையம்சம் கொண்ட சீரியலாக இருந்து வருகிறது. இதில் மிகப்பெரிய கல்லூரியை நடத்தி வரும் சூர்யாவின் கல்லூரிக்கு படிப்பதற்காக வெண்ணிலா வருகிறார். அவரை ஆரம்பத்தில் வெறுத்து ஒதுக்கும் சூர்யாவிற்கு நாளடைவில் அவர் மீது காதல் ஏற்படுகிறது் ஆரம்பத்தில் வெண்ணிலா இவரை காதலித்துக் கொண்டிருந்தது போய், வெண்ணிலாவை சூர்யா காதலிக்க தொடங்குகிறார். ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் வெண்ணிலாவை சூர்யா திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் இந்த திருமணத்தில் வெண்ணிலாவிற்கு உடன்பாடு இல்லை. வெண்ணிலா சூர்யாவை வெறுத்து ஒதுக்க ஆரம்பிக்கிறார். கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்க, வெண்ணிலாவைத் தேடி சூர்யா செல்வது போலவும் வெண்ணிலவுக்காக சூர்யா காத்திருப்பது போலவும் கதைக்களம் நகர்ந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க தற்போது கல்லூரியில் இருந்து ஒரு கிராமத்திற்கு செல்கின்றனர். அங்கு வெண்ணிலாவும் சூர்யாவும் காரில் சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது அந்த ஊரில் பிரச்சனை ஏற்படவே சூர்யா அதை தட்டிக் கேட்கிறார். ஆனால் சூர்யா மீது கோபம் கொள்ளும் ரவுடிகள் அவரை துரத்த ஆரம்பிக்கின்றனர். காரை எடுத்துக் கொண்டு வேகமாக செல்லும் சூர்யா ஒரு வைக்கோல் போருக்குள் நுழைந்து தப்பிக்கிறார்.

வைக்கோல் போரில் காரில் வெண்ணிலாவும் சூர்யாவும் நாள் முழுக்க அமர்ந்திருக்கின்றனர். அப்போது வெண்ணிலாவிற்கு திடீரென பசி ஏற்படுகிறது. பின்னர் கதவை திறந்து பார்க்கும் சூர்யா வெளியில் ரவுடிகள் அமர்ந்து பிரியாணி தின்பதை பார்க்கிறார். அவர் சென்று பிரியாணியும் ஒரு வாட்டர் பாட்டிலையும் எடுத்து வருகிறார். பிரியாணியை தின்றுவிட்ட வெண்ணிலாவுக்கு விக்கல் ஏற்படுகிறது. அப்போது அவர் அந்த பாட்டிலை எடுத்து தண்ணீர் என நினைத்துக் குடிக்க அதில் சாராயம் இருக்கிறது. இதனால் அளவுக்கு அதிகமாக குடித்து காரிலேயே மட்டை ஆகிவிடுகிறார் வெண்ணிலா. மேலும் போதையில் உளறவும் தொடங்குகிறார். அந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television