அர்ஜுனு உனக்கு ஆப்பு ரெடி ஆயிட்டே இருக்கு.! அர்ஜுனை நெருங்கிய கோதை.! தமிழும் சரஸ்வதியும் Promo

தமிழும் சரஸ்வதியும் சீரியலின் எபிசோடு இன்று மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தனை நாள் கோதை தனது மருமகன் அர்ஜுனை நல்லவன் என்று நம்பிக் கொண்டிருக்கும் நிலையில், அவருக்கு முதல் முறையாக அர்ஜுன் பற்றிய ஒரு துப்பு ஒன்று கிடைக்கிறது. இதனால் அர்ஜுன் பற்றி விரைவிலேயே கோதை புரிந்து கொண்டு அவரை வீட்டில் இருந்து வெளியே அனுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடரில் கோதை இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை நடத்தி வரும் கோதை தற்போது தனது மகன் தமிழ் மீது எந்த தவறும் இல்லை, தனது மருமகன் தான் ஏதோ தவறு செய்கிறார் என்கிற எதார்த்தத்தை புரிந்து கொண்டிருக்கிறார். இதிலிருந்து இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ப்ரோமோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அர்ஜுனு உனக்கு ஆப்பு ரெடி ஆயிட்டே இருக்கு.! அர்ஜுனை நெருங்கிய கோதை.! தமிழும் சரஸ்வதியும் Promo 1

விளம்பரம்

இன்று நடேசன் அர்ஜுனனை காரில் பின்தொடர்ந்து செல்கிறார். அப்போது அர்ஜூன் சில ரவுடிகளிடம் ஏதோ பணம் கேட்டுக் கொண்டிருந்ததாகவும், பணம் கொடுத்து கொண்டு இருந்தது போலவும் அவர் பேசுவதை கண்டார். அதை தற்போது கோதையிடம் வந்து கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது கோதை “எதற்காக ரவுடிகளுக்கு அவர் பணம் கொடுக்க வேண்டும்? இங்கு ஏதோ தவறு இருக்கிறது, இதில் நமது மகள் ராகினியை வேற நம்ம கட்டிக் கொடுத்திருக்கிறோம், நான் இப்போதே அவரை அழைத்து என்ன நடந்தது யார் அவர்கள் என்று கேட்கப் போகிறேன்” என்று கூறுகிறார். அப்போது பேசும் நடேசன் அவசரப்பட்டு கேட்டால் ஆதாரம் இல்லாமல் போய்விடும், ராகினியும் நம் மீது கோபப்படுவார், எனவே பொறுமையாக இருக்கும்படி கூறுகிறார். மேலும் அந்த ரவுடிகளின் வண்டிகளின் நம்பர் பிளேட்டை நோட் செய்து வைத்திருந்ததாகவும், அதை தனது போலீஸ் நண்பரிடம் கொடுத்திருப்பதாகவும் கூறுகிறார்.

தொடர்புடையவை  நீ யாருயா என்ன விவாகரத்து பண்றது? நான் உன்ன பண்றேன்..செம்ம கெத்தாக முடிவெடுத்த பாக்கியா

அர்ஜுனு உனக்கு ஆப்பு ரெடி ஆயிட்டே இருக்கு.! அர்ஜுனை நெருங்கிய கோதை.! தமிழும் சரஸ்வதியும் Promo 3

விளம்பரம்

போலீஸ் என்றவுடன் கோதைக்கு பதட்டம் ஏற்படுகிறது. போலீஸ் என்றால் வீட்டிற்கெல்லாம் வருவார்கள் என்று கோதை பதறுகிறார். ஆனால் நடேசன் இல்லை அவர் தனது நீண்ட கால நண்பர் வீட்டிற்கு எல்லாம் வரமாட்டார். எனக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்வதாக கூறி இருக்கிறார் என்று சொல்லி சமாதானப்படுத்துகிறார். இதனால் தற்போது பரபரப்பு எழுந்திருக்கிறது. விரைவில் கோதை அர்ஜுன் பற்றிய உண்மைகளை கண்டுபிடிப்பாரா இல்லையா என்கிற எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment